Guru Peyarchi 2024: ’மகரத்திற்கு கொட்டிக் கொடுக்க வருகிறார் குரு!’ மே 1 முதல் பொற்காலம்தான்!
”Guru Peyarchi 2024 Rasi Palan: சுக்கிரனின் வீடான ரிஷபத்தில் குரு அமர்வதால், மகர ராசிக்கும் பொருளாதார மேன்மை கிடைக்கும், வேலையில் அங்கீகாரம் இல்லாதவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும், பொருளாதாரம் சார்ந்த முயற்சிகளுக்கு பலன்கள் கிடக்கும்”
வரும் மே மாதம் ஒன்றாம் தேதி மதியம் 3.39 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். 5இல் குரு கெஞ்சினாலும் கிடைகாது என்பர்கள், அந்த வகையில் மகர ராசிக்கு ஐந்தாம் இடமான ரிஷபத்தில் குரு பகவான் வருகிறார். நிறைய நன்மைகளை தரும் குரு பெயர்ச்சியாக இந்த குரு பெயர்ச்சி விளங்கும்.
5ஆம் இடத்திற்கு வரும் குருபகவான் ஆனவர் உங்கள் ராசிக்கு 1, 9, 11 ஆகிய இடங்களை பார்த்து சுபத்துவப்படுத்துகிறார்.
சுக்கிரனின் வீடான ரிஷபத்தில் குரு அமர்வதால், மகர ராசிக்கும் பொருளாதார மேன்மை கிடைக்கும், வேலையில் அங்கீகாரம் இல்லாதவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும், பொருளாதாரம் சார்ந்த முயற்சிகளுக்கு பலன்கள் கிடக்கும்.
புதிய வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டம் இது. வேலைக்காக ஏப்ரல் மாதத்தில் இருந்தே முயற்சி செய்ய வேண்டும், வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்யும் மகர ராசிக்காரர்களுக்கு தசாபுத்திகள் ஆதரவு இருந்தால் நிச்சயம் வெளிநாட்டு வேலை உறுதி ஆகும்.
படிப்பு சார்ந்த விஷயங்களிலும் குரு பகவான் நன்மை செய்வார். 4ஆம் இடத்தில் இருந்த குருவால், அவமானம், படுதோல்வி, உடல்நலக்குறைவு உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்து இருப்பீர்கள், இனி இது போன்ற சிக்கல்கள் தீரும்.
பொருளாதாரத்தை பொறுத்தவரை, புதிய தொழில் தொடங்க நினைக்கும், மகர ராசிக்காரர்களுக்கு இது நல்ல காலகட்டம், ஜனன கால ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை ஆராய்ந்து, நடக்கும் தசாபுத்திகளுக்கு ஏற்ப தொழில்களை தொடங்குவது நல்லது.
ஏற்கெனவே மகர ராசிக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு பாத சனிக்கான பாதிப்பு உள்ளது. இருப்பினும் குரு பார்வையால் பல நன்மைகள் நடைபெறும். பொருளாதாரத்தை பொறுத்தவரை மிக சிறப்பாக இருக்கும்.
குடும்பத்தை பொறுத்தவரை, திருமணம் ஆகாத மகர ராசிக்காரர்களுக்கு, திருமணம் நடைபெறும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணம் உறவில் பிரச்னை உள்ளவர்களுக்கு பிரச்னைகள் தீரும்.
டாபிக்ஸ்