Guru Peyarchi 2024: வருமானத்தை பெருக்க வாய்ப்பு தரும் குரு..! முயற்சிகள் அனைத்தும் மிருகசீரிஷம் நட்சத்தினருக்கு நன்மையே
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024: வருமானத்தை பெருக்க வாய்ப்பு தரும் குரு..! முயற்சிகள் அனைத்தும் மிருகசீரிஷம் நட்சத்தினருக்கு நன்மையே

Guru Peyarchi 2024: வருமானத்தை பெருக்க வாய்ப்பு தரும் குரு..! முயற்சிகள் அனைத்தும் மிருகசீரிஷம் நட்சத்தினருக்கு நன்மையே

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 02, 2024 06:05 PM IST

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த மிதுன ராசியினருக்கு குரு பகவனால் கிடைக்கப்போகும் நற்பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் குருபெயர்ச்சி பலன்கள்
மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் குருபெயர்ச்சி பலன்கள்

2024 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி மேஷத்தில் இருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் இடம் மாறுகிறார். இந்த இடமாற்றத்தால் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட இருக்கிறது.

குரு பெயர்ச்சியால் மிருகசீரிஷம் நட்சத்தினர் பெறும் பலன்கள்

செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்த மிருகசீரிஷம் நட்சத்தினர் மூலமாகவும் குரு பகவான் சஞ்சாரம் செய்வார். குரு பகவானின் பெயர்ச்சி சுமார் ஒரு ஆண்டுகள், அதாவது 2025 மே வரை தொடரும்.

வரும் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை, குரு பகவான் வக்கர நிவர்த்தி அடைவார். மிருகசீரிஷம் நட்சத்திம் 1,2 ஆகிய பாதங்களில் சஞ்சாரம் செய்வார். அந்த காலகட்டத்தில் தெய்வ அனுகூலம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் நன்மைகள், எதிர்பாராத ஆன்மிக தரிசனம் மேற்கொள்வீர்கள்

வருமானம் பெருக வாய்ப்பு

குரு பகவான் இந்த முறை சுக்கிரன் வீட்டில் சஞ்சாரிக்கிறார். இதனால் இந்த ஆண்டில் பொருளாதார நிலைமை சீராக இருக்கும். கணிவான பேச்சால் நல்ல வருமானத்தை பெறவும் வாய்ப்பு இருக்கிறது. முயற்சிகள் அனைத்து சாதகமான சூழ்நிலையை தருகிறது.

உங்களது சிந்தனைகளை செயலாக்கம் பெறுவதற்கான சூழ்நிலைகளை குருபகவான் தருகிறார். இயற்கையிலேயே தைரியமான நட்சி்த்திரகார்ரகளாக இருக்கும் மிருகசீரிஷம் நட்சத்திரகாரர்கள் குருபகவான் அணுகூலம் கிடைப்பதால் துணிச்சலாக செயல்படலாம்.

சகோதர, சகோதரிகளுக்கு சுப காரியங்கள் நிகழலாம். தன்னப்பிக்க பிறக்கும். விவசாயம் சார்ந்த துறையினருக்கு நல்ல ஏற்றம் இருக்கிறது. உற்பத்தி சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல வருமானமும் கிடைக்கும்.

கவனம் தேவை

தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நிலம் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. பங்குசந்தை முதலீடு செய்வதில் சற்று பொறுமையாக இருக்க வேண்டும்.

எதிரிகளின் ஜெயிப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதால் அதிலும் கவனம் தேவை.

கடன்கள் மெல்ல குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தேவையில்லாமல் கடன் வாங்க வேண்டாம். உத்தியோகத்தில் முயற்சியுடன், உழைப்பையும் தந்தால் பதவி உயர்வுக்கான வாய்ப்பு உள்ளது. அந்நிய மொழி பேசுபவர்களின் சகாயம் ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம்

சிறுநீர் தொடர்பான பிரச்னை, சீறுநீரக கற்கள், பார்வை பிரச்னை, பல் தொடர்பான பிரச்னைகள் வந்து போகலாம். எனவே உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருக்க வேண்டும்.

இந்த குருபெயர்ச்சி எந்த அளவுக்கு முயற்சியை வெளிப்படுத்கிறீர்களோ அந்த அளவு பலனை பெறலாம். நட்சத்திர அதிபதியான முருகன் வழிபாடு, சிவதரிசனம், நவக்கிரகங்களில் குரு பகவானை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் காணலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்