Golden Chariot: நவராத்திரி திருவிழா ..பழனியில் தங்க ரத புறப்பாடு 9 நாட்கள் ரத்து!
நவராத்திரி விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் புறப்பாடு ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோயில் நவராத்திரி விழாவை முன்னிட்டு 15 ஆம் தேதி முதல் 9 நாட்களுக்கு தங்க ரத பிறப்பாடு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோயில் உலக புகழ் பெற்ற திருக்கோயில்களில் ஒன்றாகும்.
இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் ஆகிய திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும். இதுதவிர வார நாட்களிலும் விடுமுறை தினங்களிலும் முருகனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு. இத் திருக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் பழனி முருகன் கோயிலில் விமர்சையாக நடைபெறக்கூடிய விழாக்களில் ஒன்றான நவராத்திரி விழா வரும் 15 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நவராத்திரி விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயில் மலை மீது தினமும் நடைபெறக்கூடிய தங்கரத புறப்பாடு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் 15 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை தங்க ரத புறப்பாடு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாகவும், 24 ஆம் தேதி முதல் வழக்கம் போல தங்கரதம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தினமும் இரவு 7 மணிக்கு தங்க ரதப் புறப்பாடு நடைபெறுவது வழக்கம். கட்டணம் செலுத்தும் பக்தர்கள் தங்க ரதத்தை இழுக்க அனுமதிக்கப்படுவர். அவ்வாறு தங்க ரதம் இழுக்கும் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாத தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்