தமிழ் செய்திகள்  /  Astrology  /  From Dhanush To Meenam, The Results Of Those Born In The Same Rasi And Lagna

’தனுசு முதல் மீனம் வரை!’ ஒரே ராசி ஒரே லக்னத்தில் பிறந்தவரா நீங்கள்! உங்க வாழ்கை இப்படித்தான் இருக்கும்!

Kathiravan V HT Tamil
Apr 20, 2024 11:31 AM IST

“லக்னமும், ராசியும் ஒரே கிரகத்தின் ஆதிபத்தியத்தில் வருவது என்பது அதிசயமான அமைப்பு ஆகும்”

ஒரே ராசி - ஒரே லக்னத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்!
ஒரே ராசி - ஒரே லக்னத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்!

சந்திரன் எந்த ராசியில் இருக்கும் போது நாம் பிறக்கிறோமோ அதுதான் ராசி, அவர் எந்த நட்சத்திரத்தில் உள்ளாரோ அதுதான் நமது ஜென்ம நட்சத்திரம்.

சூரியனின் ஒளி ஒரு நாளில் 12 லக்னங்களின் மீதும் குவிக்கப்படும். 2 மணி நேரத்திற்கு ஒரு லக்னம் என்பது இதில் தோராய கணக்காகும்.

லக்னமும், ராசியும் ஒரே கிரகத்தின் ஆதிபத்தியத்தில் வருவது என்பது அதிசயமான அமைப்பு ஆகும்.

ராசியும், லக்னமும் ஒன்றானால் அந்த கிரகத்தின் வலிமை அதிகப்படியாக உங்களுக்கு கிடைக்கும். தெளிவான சிந்தனைகள், செயல் திறன், தீர்க்கமாக முடிவெடுத்தல் ஆகிய குணாதிசயங்கள் இருக்கும்.

தனுசு ராசி - தனுசு லக்னம்

தனுசு லக்னம் - தனுசு ராசி என்பது உன்னதமான அமைப்பு ஆகும். அதிகாரம், உயர்பதவியை எட்டிப்பிடிப்பது, வாழ்கையில் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்து கொண்டே இருக்கும். 

இது உபய லக்னம், உயப ராசி என்பதால் வேலையில், பதவிகளில் பெற வேண்டிய மன அமைதியை சொந்த தொழில்களில் பெற முடியாது. 

வேலை, பதவி, அடுத்தவர்களுக்கு சேவைகளில் விற்பதன் மூலம் கிடைக்கும் உயர்வுகள் உங்கள் வாழ்கைக்கு மேன்மை தருவது உடன்,  உச்சம் தொட வைக்க காரணமாக அமையும். 

இவர்கள் சேவைத் தொழில் மூலம் தங்கள் அறிவை விற்பதன் மூலம் அதிக உயரத்தை பெற முடியும், ஆனால் சுய தொழில் செய்வதை ஒன்றுக்கு பலமுறை யோசித்து செய்வது அவசியம். இவர்கள் உத்யோகத்தில் மேன்மை பெறுவார்கள். 

மகர லக்னம் - மகர ராசி 

மகர லக்னம் - மகர ராசியில் பிறந்தவர்கள் கடும் உழைப்பின் மூலம் வாழ்வின் அனைத்து சந்தோஷங்களையும் பெறுவார்கள்.  பெண் வீடு என்பதால் சற்று மென்மையானவர்களாக இருப்பார்கள். சனி பகவானி ராசியில் செவ்வாய் உச்சம் பெறுவதால் வைராக்கியம் அதிகமாக இருக்கும். 

இவர்கள் மத்திம வயதுக்கு மேல் வாழ்கையில் நல்ல நிலையை அடைவர்கள். பிறந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு செல்லுதல், தாய், தந்தையரை விட்டு தள்ளி இருக்கும் சூழல் ஏற்படும். 

பிடிவாதம், சோம்பேறித்தனம், நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிபோடும் குணங்கள் இவர்களுக்கு பின்னடைவை தரும். சனி பகவானின் மந்த குணங்கள் வராமல் இருந்தால் இவர்கள் வைராக்கியசாலிகளாகவும், அதிர்ஷ்டசாலிகளாகவும் இருப்பார்கள். 

இளைமையில் பலவிதமான துன்பங்களை இவர்கள் சந்தித்து இருப்பார்கள். வாழ்கை துணை உதவி இவர்களுக்கு ஆதரவாக இருக்கும். 

கும்ப லக்னம் - கும்ப ராசி

கும்ப லக்னம் - கும்ப ராசியை பொறுத்தவரை பிடிவாதம், முரட்டுத்தனம், தான் கொள்வதே சரி என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்கும். சனி பகவான் கேந்திரம், திரிகோணங்களில் அமரும் பட்சத்தில் மிகபெரிய தொழில் அதிபர்களாக உருவாக வாய்ப்புக்கள் உண்டு. 

கும்ப லக்னம்- கும்ப ராசியில் பிறப்பவர்கள் கூடுமான வரை நண்பர்கள், உடன் பிறந்தவர்களும் வஞ்சிக்கப்படுவார்கள். இவர்கள் நிதான போக்கை கடைப்பிடிப்பது அவசியம், அதே வேளையில் மிகுந்த நிதானமாக இருப்பது பலன் தராது. 

மீன லக்னம் - மீன ராசி 

மீன லக்னம்-மீன ராசியை பொறுத்தவரை சாத்வீக குணம் இயற்கையாக வந்துவிடும். இயற்கை சுபரான சுக்கிரன் உச்சம் பெறுவதால் பெறும் நன்மைகள் கிடைக்கும். தெய்வீகம் குடிக்கொள்ளும், ஆன்மீகம் வழிநடத்தும், குலதெய்வம் வழிநடத்தும். மருத்துவம், நகை வியாபாரம் உள்ளிட்ட தொழில்கள் மேன்மை தரும். சுக்கிரன் உச்சம் பெறுவதால் காமத்தால் சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும் என்பதால் இதில் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம்.

WhatsApp channel

டாபிக்ஸ்