தமிழ் செய்திகள்  /  Astrology  /  Four Rasis Will Get Yoga Benefit After Venus And Guru Transit In May Month

Venus and Guru Transit: குரு, சுக்கிரன் இணைவால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்! எந்தெந்த ராசிகளுக்கு பணவரவு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 04, 2024 03:15 PM IST

ரிஷப ராசியில் குருவும், சுக்கிரனும் இணைந்து கஜலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகிறார்கள். கஜலட்சுமி ராஜயோகத்தின் பலன் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த யோகத்தால் எந்தெந்த ராசிகளுக்கு நன்மையும், யோகமும் கிடைக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

கஜலட்சுமி ராஜயோகத்தை பெறப்போகும் நான்கு ராசிகள்
கஜலட்சுமி ராஜயோகத்தை பெறப்போகும் நான்கு ராசிகள்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த யோகத்தால் நான்கு ராசிகளுக்கு யோகமும், பணவரவும் கிடைக்கும். அந்த வகை எந்தெந்த ராசிகள் கஜலட்சுமி ராஜோயத்தை பெறுகிறது என்பதை பார்க்கலாம்

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு கஜலட்சுமி ராஜயோகத்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். பணியில் பதவி உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கூடும். பொருளாதார நிலை மேம்படும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு கஜலட்சுமி ராஜயோகத்தால் பணவரவு கிடைக்கும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. பணவரவு உண்டாகும். கடன் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மனைவியிடமிருந்து நல்ல ஆதரவை பெறுவீர்கள்.

சிம்மம்: கஜலட்சுமி ராஜயோகம் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். எடுக்கும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். பணத்தை சேமிக்கும் எண்ணம் மேலோங்கும்.

துலாம்: கஜலட்சுமி ராஜயோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. முதலீடு செய்த விஷயங்களில் இருந்து நல்ல வருமானத்தை பெறுவீர்கள். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்