Sani bhagwan blessings: சனீஸ்வரரின் பேரருளைப் பெறுவதற்கான ஐந்து வழிமுறைகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani Bhagwan Blessings: சனீஸ்வரரின் பேரருளைப் பெறுவதற்கான ஐந்து வழிமுறைகள்

Sani bhagwan blessings: சனீஸ்வரரின் பேரருளைப் பெறுவதற்கான ஐந்து வழிமுறைகள்

Nov 19, 2022 01:26 PM IST I Jayachandran
Nov 19, 2022 01:26 PM , IST

  • நவக்கிரகங்களில் உக்கிரமான சக்தி படைத்த சனீஸ்வரரின் அருள் கிடைத்தால் எல்லாரது வாழ்க்கையும் வளம் பெறும்.

திருநள்ளாறில் வீற்றிருக்கும் சனீஸ்வர பகவான்

(1 / 10)

திருநள்ளாறில் வீற்றிருக்கும் சனீஸ்வர பகவான்

சனீஸ்வர பகவானின் கோபத்துக்கு ஆளாக நேரிட்டால் ஒருவரது வாழ்க்கையில் பல நெருக்கடிகளைச் சந்திக்க ஏற்படும். கடும் துன்பங்களை அனுபவிக்க வேண்டும். பகவானின் அருளைப் பெற்றால் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகி பிரச்னைகள் பறந்தோடி விடும். இதற்கு நீங்கள் வீட்டை விட்டு வெளியே கிளம்போதும் உங்கள் கண்களில் படும் 5 சகுனங்களை கவனித்து அதற்கான பரிகாரங்களைச் செய்தால் சனி பகவானின் மனதைக் குளிர்வித்து நற்பலன்களைப் பெறலாம்.

(2 / 10)

சனீஸ்வர பகவான் என்றால் சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் தேவாதி தேவர்கள் எல்லோருக்கும் பயம் உண்டு. நீதியின் தேவனாக சனீஸ்வரனை ஜோதிட சாஸ்திரத்தில் வருணிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு அவர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்றபடி தகுந்த வெகுமதியை சனீஸ்வரன் தருவார் என்பது ஐதீகம். என்று நம்பப்படுகிறது. எனவே ஒருவர் எப்போதும் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் சனி கோபம் அடைந்தால் வாழ்க்கையில் பெரும் பிரச்னைகள் ஏற்பட்டுவிடும்.

(3 / 10)

ஜோதிடம் சில சகுன குணங்களை பற்றி விளக்கியுள்ளது. அந்த சகுனங்களின்படி, சனீஸ்வர பகவான் உங்கள் மீது மகிழ்ச்சியாக இருக்கிறாரா இல்லையா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனிக்கிழமைகளில் இந்தச் சகுனங்களில் ஏதேனும் ஒன்றைப் பார்த்தால், சனி பகவான் உங்களுக்குக் கருணை காட்டுவார். நல்ல காலம் தொடங்கும் என்பது நம்பிக்கை. அந்த 5 சகுனங்களின் குணாதிசயங்களைப் பற்றியும் அவற்றின் நற்பலன்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

(4 / 10)

அதிகாலையில் பிச்சைக்காரர்களைப் பார்த்தல்: சனிக்கிழமை அதிகாலையில் பிச்சைக்காரர்களை எதில் பார்த்து அவர் ஏதாவது கேட்டால் அது நல்ல சகுனம் என்று நம்பப்படுகிறது. அவர்களுக்கு தாராளமாக பணம், உணவு போன்ற உபச்சாரங்களைச் செய்தால் சனி பகவான் உங்கள் மீது கருணை கொள்வார். எனவே நீங்கள் பிச்சைக்காரருக்கு உதவ வேண்டும். நீங்கள் எப்படி மற்றவர்களுக்கு உதவுகின்றீர்களோ அதற்கேப உங்களுக்குத் தர்மம் வந்து சேரும். தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்பதுபோல் உங்களுக்கு இக்கட்டான நேரத்தில் சனீஸ்வர பகவான் உங்களது தர்மப் பலன்களைத் தந்து காப்பாற்றுவார் என்பது நம்பிக்கை.

(5 / 10)

துப்புரவுப் பணியாளர்களின் பார்வை: நீங்கள் குறிப்பாக சனிக்கிழமையன்று காலையில் துப்புரவுப் பணியாளர்களை எதிர்கொண்டால் அது சுப சகுனமாகக் கருதப்படுகிறது. அவர்களுக்கும் உங்கள் வீட்டில் பணிபுரியும் வேலையாட்களுக்கும் சனிக்கிழமை தோறும் ஏதாவது கொடுங்கள். இதன்மூலம் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகள் குறைத்து வீட்டில் செல்வத்தை அதிகரிக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. மேலும், சாலைகளிலும் வீட்டிலும் உள்ள குப்பைகளைத் துப்புரவு வேலையாட்கள் அகற்றி சுத்தம் செய்வதுபோன்று நீங்கள் அவர்களுக்குச் செய்யும் பரோபகாரத்தால் உங்கள் வாழ்க்கையில் சிரமங்களை ஏற்படுத்தும் விஷயங்களை குப்பைகளைப் போல் களைந்து விடுவார் சனீஸ்வர பகவான்.

(6 / 10)

கருப்பு நாயைப் பார்த்தல்: சனிக்கிழமையன்று சனீஸ்வரர் கோயிலுக்குச் சென்றால் அங்கு கோயிலின் முன் கருப்பு நாயைப் பார்ப்பது உங்களுக்கு நல்ல அறிகுறியாகும். இந்த நாளில் கருப்பு நாய்க்கு உணவளித்தால் சனிபகவானின் அருள் நிச்சயம் கிடைக்கும். நன்றியுள்ள பிராணி நாய். சனீஸ்வரனுக்கு உகந்த நிறம் கருப்பு. எனவேதான் கருப்பு நிற நாயைப் பார்த்தல் நல்ல சகுனமாகக் கருதப்படுகிறது. நாய்களின் நற்குணம் என்றால் விசுவாசம். அதுபோல் உங்களிடத்தில் விசுவாசமாக இருப்பவர்களிடம் நீங்களும் அதற்கு நன்றி செலுத்த வேண்டும். இப்படி விசுவாசத்தை மெச்சும் உங்களுக்கு நன்றிக்கடனாக சனீஸ்வரரின் கருணை கைகொடுக்கும்.

(7 / 10)

கருப்பு பசுவைப் பார்த்தல்: சனிக்கிழமையன்று நீங்கள் ஒரு முக்கியமான வேலைக்குச் செல்லும் வழியில் கருப்புப் பசுவைக் கண்டால் நிச்சயம் அந்த வேலை நீங்கள் விரும்பியபடியே நிறைவேறும். எனவே சனிக்கிழமையன்று கருப்பு பசுவை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். முடிந்தால், இந்த நாளில் கருப்பு பசுவுக்கு சிறிது உணவு கொடுங்கள், அது உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து தொல்லைகளையும் நீக்கும். தாய்க்குச் சமமாக நாம் பசுக்களை வழிபடுவதில்லையா? பசுவானது தனது கன்றுகளுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் பாலை வார்க்கிறது. எனவே தாய்போன்ற பசுவை நாம் போற்றி உணவளித்தால் அது உலகெலாம் உணவு தந்ததற்குச் சமம். இந்த காரியத்தை மெச்சி சனீஸ்வரபகவானின் பேரருளை தாராளமாகத் தருவார்.

(8 / 10)

கருப்பு காகங்களைப் பார்த்தல்: சனிக்கிழமையன்று உங்கள் வீட்டின் முன் ஒரு கருப்பு காகம் வருமானால் அதற்கு குடிக்கத் தண்ணீர் கொடுங்கள். தண்ணீர் தவிர உணவுப் பதார்த்தங்களும் வைக்கலாம். அதை காகம் அருந்தினாலோ, சாப்பிட்டாலோ மிகவும் நல்ல சகுனமாக கருதப்படுகிறது. இதை பார்க்கும் நபருக்கு சனி பகவான் மகிழ்ச்சி அடைவார் என்பது நம்பிக்கை. ஆனால் சனிக்கிழமையன்று உங்கள் தலைக்கு மேல் காகம் கூவினால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இது சனிபகவான் கோபமாக இருப்பதற்கான அறிகுறியாகும். அதைப்பற்றி கவலை கொள்ளாமல் அந்தக் காகத்துக்கு வேண்டியதைச் செய்யுங்கள். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதற்கு ஏற்ப காகங்கள் கூட்டங்கூட்டமாகத் தான் வாழும். மக்களிடையே ஒற்றுமை மனப்பான்மையை பறைசாற்றும்விதமாக காகங்கள் வாழ்கின்றன. காக்கா கூட்டத்தில் தாத்தா காக்கா, பாட்டி காக்கா, அம்மா, அப்பா, தம்பி, சித்தப்பா மட்டுமல்லாமல், பாட்டன், கொள்ளுப்பாட்டன், பூட்டன் எனச் சந்ததியாக வாழும். மூத்த காக்கைகள் தங்களது இளைய தலைமுறையினர் பசியாறிவிட்டனர் என்ற நிம்மதியுடன் தங்களது உணவைப் புசிக்கும். இதனால்தான் காக்கைகளுக்கு உணவளித்தால் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு நிகர் என்பர். 

(9 / 10)

ஆகமொத்தம் சனீஸ்வர பகவானின் பேரருளைப் பெறுவதற்கு இந்த ஐந்து சகுனங்களை வெறுமனே பின்பற்றி வந்தால் போதாது. அதில் தாத்பரியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்களிடையே வேற்றுமை பார்க்காமல் கருணை காட்ட வேண்டும், ஊராருக்கு நன்மை செய்வர்களுக்கு பதிலுக்கு நன்மை செய்ய வேண்டும், விசுவாசம் கொண்டவர்களுக்கு தகுந்த வெகுமதி தர வேண்டும், தாயைப் போற்றி வணங்க வேண்டும், உற்றார் உறவினர்களுக்கும் வயதான மூதாதையர்களுக்கும் உணவளித்து அனுசரித்து கூடி வாழவேண்டும் என்பவையே உண்மையில் சனீஸ்வர பகவானின் அருளைப் பெறச் செய்யும் செயல்களாகும். வாழ்க வளமுடன்!

(10 / 10)

மற்ற கேலரிக்கள்