தமிழ் செய்திகள்  /  Astrology  /  First Solar Eclipse Of 2024: Find Why These 4 Zodiac Signs Will Receive Luck

Solar Eclipse Luck Rasis: சூரிய கிரகணம் காரணமாக அதிர்ஷ்டம், செல்வ செழிப்பை பெற இருக்கும் நான்கு ராசிகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 26, 2024 05:35 PM IST

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வரும் ஏப்ரலில் நிகழ இருக்கிறது. இந்த நேரத்தில் வியாபரத்திலும், செய்யும் தொழிலிலும் லாபத்தை அள்ளப்போகும் ராசிகள் எவை என்பதை பார்க்கலாம்

சூரிய கிரகணத்தால் நன்மை பெற போகும் ராசிகள்
சூரிய கிரகணத்தால் நன்மை பெற போகும் ராசிகள் (Pexel)

ட்ரெண்டிங் செய்திகள்

சுமார் 7 நிமிடங்கள் 30 விநாடிகள் வரை நீடிக்கும் என வானியலாளர்கள் கூறுகிறார்கள். கிரகணம் நிகழும் 7 நிமிடங்களில் அவை ஏற்படும் இடங்களில் பகல் பொழுது இருளாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூரிய கிரகணம் சில ராசிகளுக்கு நன்மைகளை தருவதாக உள்ளது.

வியாபரம், செய்யும் தொழிலில் லாபத்தையும், செல்வ செழிப்பையும் தரும் எனவும் ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சூரிய கிரகணம் காரணமாக நன்மை பெறப்போகும் ராசிகள் எவை என்பதை பார்க்கலாம்.

மேஷம்

இந்த வான நிகழ்வு நேர்மறையான மாற்றங்களை தருகிறது. குறிப்பாக நிதி நிலைமை சிறப்பாக மாற்றி அமைக்கலாம். எந்தவொரு பிரச்னைகளுக்கும் தேவையான தீர்வை வழங்குகிறது. மற்றவர்களிடமிருந்த உரிய மரியாதையை பெற்று தருகிறது. காதல் வாழ்க்கையில் எந்த சிக்கலும் ஏற்படாமல் அமைதியை தருகிறது.

இந்த நேரத்தில் வாகனங்களை வாங்கும்போது எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது, ஏனெனில் வானில் இருந்து வெளிப்படும் சக்திகள், கதிர்கள் அவற்றுக்கு உகந்ததாக இருக்காது.

மிதுனம்

இந்த சூரிய கிரகணம் முதலீட்டு முயற்சிகளுக்கு சாதகமான சூழ்நிலையை தருகிறது. உங்கள் தொழில் மற்றும் வருமான வாய்ப்புகள் தொடர்பான நேர்மறையான முன்னேற்றங்கள் இந்த காலகட்டத்தில் உள்ளன.

வியபாரிகள், தொழில்துறையை சேர்ந்தவர்கள் எதிர்வரும் காலத்தில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். இந்த காலம் நிதி வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை குறிப்பதாக இருப்பதால், உங்கள் நிதி பயணத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடையலாம்.

சிம்மம்

ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தின் நேர்மறையான விளைவுகள் நிகழும். வான நிகழ்வு உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளின் அலையை எழுப்புகிறது. தொழில், வியாபரத்தில் வளர்ச்சியும், மாற்றங்களும் ஏற்படலாம் .

இந்த காலகட்டத்தில் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் அமையக்கூடும்.

எடுக்கும் காரியத்தில் புதிய முயற்சிகள் கைகொடுக்கும். குடும்பத்தினர், பெற்றோரின் ஆதரவு புதிய முயற்சிகளில் ஈடுபட ஊக்கவிக்கும்.

தனுசு

2024 ஆம் ஆண்டில் இந்த முதல் சூரிய கிரகணத்தின் பல்வேறு நன்மை தரும் பலன்களை பெறுவீர்கள். இந்த நேரத்தில் வான சக்திகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால், இது பணியிடத்தில் பாராட்டும், அங்கீகாரமும் பெறுவீர்கள்.

கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக உங்கள் நிலை மேலும் வலுவடையும். நிதி ஆதாயம் பெருகும். செல்வ செழிப்பு மற்றும் முன்னேற்ற அடைவதற்கான நேரமாக இது அமைந்துள்ளது.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்