Guru Bhagavan: விசேஷம் தரும் வியாழக்கிழமை - தானம் செய்தால் குரு கொட்டிக் கொடுப்பார்..!
வியாழக்கிழமை குருபகவானை வேண்டி விரதம் இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு பகவானுக்கு விசேஷ நாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் விரதம் இருந்து வழிபட்டால் அனைத்து பாவங்களும் நீங்கும் எனக் கூறப்படுகிறது. அதேபோல் பரிகாரம் செய்யும் நாளாகவும் இந்த வியாழக்கிழமை கருதப்படுகிறது.
காலையில் எழுந்து குளித்துவிட்டு மஞ்சள் நிற உடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபாடு செய்தால் நன்மைகள் பெருகும் என ஆன்மீகம் கூறுகிறது. குரு பகவானுக்கு மஞ்சள் நிற ஆடை அணிவித்து, முல்லை மற்றும் சரக்கொன்றை மலர்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.
வேர்க்கடலை சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு, கடலை பொடி சாதம் ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைத்து வழிபட்டு மற்றவர்களுக்கு அதனை அன்னதானம் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் மஞ்சள் நிற ஆடைகளையும் தானம் செய்யலாம். குருபகவானுக்குப் படைக்கப்பட்ட உணவுகளைக் குழந்தைகளுக்கு தானம் செய்தால் அதீத சிறப்புக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
குரு பார்வை பட்டாலே கோடி நன்மை கிடைக்கும் என முன்னோர்கள் கூறுவார்கள். குழப்ப நிலை மாற வேண்டும் என்றால் குருவின் பார்வை பட வேண்டும். குருவின் பார்வை பட்டால் மனதில் தைரியமும், புத்தி தெளிவும் உண்டாகும். தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் அமைந்திருக்கும் திட்டை குரு பகவானை விரதம் இருந்து வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்தால் நன்மைகள் பெருகும் எனக் கூறப்படுகிறது.
வேலையில்லாதவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து வழிபட்டால் விரைவில் வேலை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. சங்கடங்கள் நீங்க வேண்டும் என்றால் தானங்கள் அதிகமாகச் செய்ய வேண்டும். திருமணம் ஆகாதவர்கள் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலுக்கு வந்து தனி சன்னதியில் அருள்பாலிக்கும் குருபகவானை வணங்கி வழிபாடு செய்தால் விரைவில் திருமண பாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்