Tulasi Plants Vastu: வீட்டில் துளசி வளர்த்தால் இதை மட்டும் செய்யாதீர்கள்! பெருளாதார இழப்பை தடுக்க முடியாது-dont make your tulasi plants dried otherwise financial losses are inevitable - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tulasi Plants Vastu: வீட்டில் துளசி வளர்த்தால் இதை மட்டும் செய்யாதீர்கள்! பெருளாதார இழப்பை தடுக்க முடியாது

Tulasi Plants Vastu: வீட்டில் துளசி வளர்த்தால் இதை மட்டும் செய்யாதீர்கள்! பெருளாதார இழப்பை தடுக்க முடியாது

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 28, 2024 02:07 AM IST

இந்து மதத்தில் துளசி செடிக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. துளசி செடியை காய்ந்து விடாமல் பார்த்து கொள்வது முக்கியம் என கூறப்படுகிறது. துளசியை காய விட்டால் என்ன அர்த்தம் என்பதையும், துளிசியை காய விடுவதால் நிகழும் பாதிப்புகள் பற்றியும் ஜோதிடத்தில் கூறப்படும் விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்

துளசி செடி வாஸ்து
துளசி செடி வாஸ்து

துளசியில் மருத்துவ குணங்கள் ஏராளமாக நிறைந்திருப்பதுடன், இந்துக்களால் வழிபாட்டிலும் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. வீட்டில் துளசி செடியை மாடத்தில் அமைத்த பலரும் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

துளசி செடி பச்சை நிறத்தில் இருந்தால் அந்த குடும்பம் கடவுளால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் என்பது நம்பிக்கை. ஆனால் வீட்டில் இருக்கும் துளசி செடி பச்சையாக இல்லாமலும், அடிக்கடி காய்ந்து போனாலும், செடி சரியாக வளராமல் இருந்தாலும், ஏதோ அமங்கள விஷயத்தின் அறிகுறி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். துளிசி செடியை காய விடக்கூடாது. அதேபோல் காய்ந்த செடியையும் வளர்க்க கூடாது. காய்ந்த செடிக்கு பதிலாக புதிய செடியை வைத்து வளர்க்க வேண்டும்.

எதிர்மறை சக்திகள்

பச்சையாக இருக்கும் துளசி செடி திடீரென காய்ந்து போனால், வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் தீய சக்திகளின் இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறியாக கருதப்பட வேண்டும். அதன் தாக்கம் குடும்ப உறுப்பினர்கள் மீது மோசமாக இருக்கும். இதன் காரணமாக காரியத்தில் எதிர்மறை செயல்பாடு, தீர்க்க முடியாத பிரச்னை, வேலை இடத்தில் தொந்தரவு, குடும்பத்தில் தகராறு ஏற்படலாம்.

துளசி செடி காய்வதற்கு மற்றொரு காரணம் வீட்டில் நிலவும் அலட்சிய போக்கு இருந்து வருகிறது. துளசியை சரியான முறையில் பாதுகாக்கவில்லை என்றால் அதன் தாக்கம் செடியில் வெளிப்படையாக தெரியும்.

துளசி செடி பராமரிப்பில் அலட்சியம் காட்டுவது குடும்பத்தில் உள்ளவர்கள் மீது உங்களுக்கு அக்கறை இல்லை என்பதை காட்டுவதாக உள்ளது. குடும்பத்தினரிடமிருந்து போதிய ஆதரவு இல்லை என்பதன் அர்த்தமாகவும் துளசி செடி காய்வது உள்ளது. சரியான கவனிப்பு இல்லாவிட்டால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். எனவே மோதல் சூழ்நிலை இருக்கும் வீட்டுக்குள் நுழைவதை லட்சுமி தேவி விரும்புவதில்லை.

பச்சை துளசி செடி குடும்பத்துக்கு பாதுகாப்பை அளிக்கிகூடியதாக உள்ளது. அது தேவைப்படும் செல்வத்தை வழங்குகிறது. செடி வறண்டு போனால் உடனடியாக வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.

வீட்டில் நேர்மறை ஆற்றல் குறையும்

துளசி செடி வீட்டைச் சுற்றி நேர்மறை ஆற்றலையும் தூய்மையையும் தரவல்லது. இந்த செடி உலர ஆரம்பித்தால், அது வீட்டில் நேர்மறை இல்லை என்பதற்கான அறிகுறியாக கருதப்பட வேண்டும்.

குடும்ப உறுப்பினர்களிடையே மோசமான உறவு இருக்கும்போது அல்லது அதிக மன அழுத்தம் மற்றும் எதிர்மறை இருந்தால், துளசி செடி உலர்ந்து இருப்பதை காணலாம்

நிதி இழப்புகள்

லட்சுமி தேவி செல்வம் மற்றும் செழிப்புக்கான தெய்வமாக வணங்கப்படுகிறார். ஒருவருக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் துளசி செடி காய்ந்து விடும். வீட்டில் பச்சை துளசி செடி இருந்தால் செல்வமும் மகிழ்ச்சியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

துளசி செடி காய்ந்து போனால் குடும்பத்தில் நிதி இழப்பும், கஷ்டங்களும் வரப்போகிறது என்பதற்கான குறியீடாக பார்க்க வேண்டும் என கூறப்படுகிறது.

துளசியை கிழக்கு திசையில் வைக்கக்கூடாது. இது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும். வடகிழக்கு அல்லது வடக்கு திசையில் வைப்பது நன்மை தரும்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்