Money Luck: மேஷம் முதல் மீனம் வரை! பணம் சம்பாதிக்க ஆசையே வராத நிலை யாருக்கு உண்டாகும்? ஜோதிட ரகசியம் இதோ!
உங்கள் லக்னத்திற்கு ஒன்று, இரண்டு, மூன்றாம் இடங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தால், சம்பாதிக்கும் எண்ணம் வராது.

உத்யோகம் புருஷ லட்சணம் என்ற காலம் மாறி, உத்யோகம் மனுஷ லட்சணம் என்ற நிலைக்கு வந்துவிட்டது. ஏதாவது ஒன்றை செய்து தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் ‘உப்பு விற்க சென்றால் மழை! மாவு விற்க சென்றால் காற்று’ என்ற நிலையில் பலர் உள்ளனர். இந்த நிலையில் சம்பாதிக்க இயலாத ஜாதகம் எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
லக்னாதிபதி வலுப்பெறுவது மிக அவசியம்
எதை ஒன்றை செய்வதாக இருந்தாலும், லக்னாதிபதியின் வலு என்பது மிக அவசியம், லக்னாதிபதி சமம் என்ற நிலைக்கு கீழே செல்லவே கூடாது. அப்படி அவர் சென்றுவிட்டாலே ஜாதகர் பெரிய முயற்சிகளை செய்ய முடியாது.
ராசி அதிபதி துணையாவது இருக்க வேண்டும்
லக்னாதிபதி கெட்டுவிட்ட நிலையில், ராசி அதிபதி துணை இருப்பது அவசியம். உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் பலர் 40 வயதிற்கு மேல்தான் பணம் சேர்த்து உள்ளனர். பணம் சம்பாதிக்க வயது தடையில்லை, ஆனாலும் லக்னாதிபதி பலகீனமாக இருப்பது, லக்னத்தில் பகை கிரகங்கள் இருப்பதும் சம்பாதிக்கும் எண்ணத்தை குறைத்துவிடும்.