Kitchen Vastu: சமையல் அறையில் இதை செஞ்சா ஜோலி முடிஞ்சு
சமையல் அறையில் வைக்கக்கூடாத, செய்யக்கூடாத விஷயங்கள் குறித்து விவரிக்கிறது, இந்த கட்டுரை
காலையில் எழுந்து சமையல் அறையில் நுழையும் போது பாஸிட்டிவ் எண்ணம் பரவி இருக்கவேண்டும். அப்போதுதான் நாம் அனைவரும் அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு பணியாற்றமுடியும்.
சமையல் அறை என்பது அன்னபூரணியும், மகாலட்சுமியும் ஒருசேர வாசம்செய்யும் இடமாகப் பார்க்கப்படுகிறது. அதனால்தான் வீட்டின் மற்ற அறைகளையோ, மற்ற பகுதிகளைவிடவோ சமையல் அறை சுத்தமாக இருந்தால்தான், மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாக செல்வச்செழிப்புடன் இருக்குமிடமாக கருதப்படுகிறது.
அதன்படி சமையல் அறையில் கட்டாயம் வைக்கக்கூடாத பொருட்கள் என்ன என்பது குறித்தும் அவ்வாறு வைத்தால் நிகழும் பிரச்னைகள் குறித்தும் பார்க்கலாம்.
- ஒவ்வொரு முறை சமையலைத்தொடங்கும்போது அடுப்பினை அன்னபூரணி தாயாக நினைத்துக்கொண்டு, தொட்டுக்கும்பிட்டுவிட்டு ஆரம்பிக்கவேண்டும். இதனால் உங்கள் வீட்டில் அன்னக்குறை ஏற்படாது.
- அரிசியை அளக்கும் அளவியில்மட்டுமே அரிசியை அளந்துபோடவேண்டும். இதற்காக பிளாஸ்டிக் டம்பளர் அல்லது எவர் சில்வர் என எவற்றையும் உபயோகிக்கவேண்டாம். ஏனெனில், அரிசி அளக்கும் அளவியிலும் அன்னபூரணி வாசம் செய்வதாக ஐதீகம்.
- அதேபோல், சமைக்கும்போது ஏற்படும் கழிவுகளை ஒருநாள் முழுக்க சமையல் அறையிலேயே வைத்திருக்கக்கூடாது. இது விருத்தியில்லாத தன்மையினை உண்டாக்கும். அதேபோல், சமையல் அறையில் சிலர் குப்பைத்தொட்டியினை வைத்திருப்பர். அதனை வெளியில் வைப்பதே சாலச்சிறந்தது.
- அவ்வாறு வீடு பெருக்கும் துடைப்பம் சமையல் அறையில் இருந்தால் இல்லத்தில் வறுமையினை உண்டாக்கும் என சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சமையல் அறையில் மருத்துவம் சார்ந்த பொருட்களை வைத்திருக்கக்கூடாது. இயற்கை மருத்துவப்பொருட்களை வைக்கலாம். ஆங்கில மருந்துகளை கண்டிப்பாக வைக்கக்கூடாது. இம்மருந்துகளை பெட்ரூமில் வைக்கலாம்.
- வீட்டில் எவ்வாறு உடைந்த கண்ணாடிப்பொருட்களை வைத்தால் நல்லது இல்லையோ, அதேபோல், உடைந்த பாத்திரங்களை வைத்தாலும் நல்லது இல்லை.
- அதேபோல் எவர் சில்வர் பாத்திரங்களில் விரிசல்விட்டிருந்தால், அதை சமையல் அறையில் வைத்து பயன்படுத்தக்கூடாது. மாறாக மற்ற அறைகளில் பயன்படுத்தலாம்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்