Dhanusu Rasiplan for August: வேலை மாற்றம் வேண்டாம், ரிலேஷன்ஷிப்பில் எச்சரிக்கை.. தனுசு ராசிக்கான ஆகஸ்ட் மாத பலன்கள் இதோ
Dhanusu Rasiplan: ஆகஸ்ட் மாதத்துக்கான தனுசு ராசிப்பலனை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். தனுசு என்பது ஒன்பதாவது ராசியாகும்.
ஆகஸ்ட் மாதத்துக்கான தனுசு ராசிப் பலன்களைப் பார்ப்போம். உங்களுக்கு அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று விருப்பம் இருக்கும். ஆனால், தற்போதைய நிலையில் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதையே செய்யுங்கள்.
செய்யும் வேலையைச் சிறப்பாக செய்வதே தற்போதைக்கு உங்களுக்கு நல்லது. பெரிய எதிர்பார்ப்புகள் உங்களுக்கு வேண்டாம்.
எதிர்மறையான கருத்துக்களை எதிர்கொள்ளுங்கள்
வேலை இடத்தில் எதிர்மறையான கருத்துக்கள் இருக்கும். அதை சரியாக கையாளுங்கள். பணத்தைப் பொருத்தவரை வரவு இருக்கும். அதேநேரம், செலவும் அதிகம் இருக்கும்.
குடும்பத்தைப் பொருத்தவரை வாழ்க்கை நன்றாக இருக்கும். ரிலேஷன்ஷிப்பில் வாக்குவாதம் வரும். ஒரு வரன் தேடுகிறீர்கள் என்றால், வரன் பார்க்கலாம். ஆனால், முடிவு எடுப்பது இந்த மாதம் வேண்டாம் என்பது ஜோதிடர்களின் கணிப்பாக இருக்கிறது.
மாணவர்களைப் பொருத்தவரை சவால்கள் இருக்கும். போட்டித் தேர்வு எழுத நீங்கள் முயற்சி செய்தால், குரு உங்களுக்கு உதவுவார். அதனால், ஆகஸ்ட் 16 வரை சில தடைகள் இருக்கும். ஆனால், அதற்கு பிறகு உங்கள் வாழ்க்கை நன்றாக செல்லும்.
புதன், சுக்கிரன் சேர்ந்திருக்கிறது. இதனால், விளையாட்டு, கலை விஷயங்களில் பாசிட்டாவாக இருக்கும். நீங்கள் உங்கள் துறைகளில் வலிமையாக இருப்பீர்கள்.
FD with higher interest rates: எந்த பேங்க் நிரந்தர வைப்பு நிதிக்கு அதிக வட்டி தருதுன்னு பாருங்க
இனம் புரியாத எண்ணங்கள்
பெண்களுக்கு ஒரு சில விஷயங்களில் போராட்டம் இருக்கும். இனம் புரியாத எண்ணங்கள் குடிகொண்டிருக்கும்.
ஆனால், அதை நீங்கள் பொருத்துக் கொள்ள வேண்டும். பொறுமை உங்களுக்குத் தேவை. உடல்நலத்தைப் பொருத்தை வரை 8ம் இடத்தில் உள்ள சூரியன், 6ம் இடத்தில் உள்ள செவ்வாய், இரண்டுமே சராசரியாக இருக்கிறது. குரு 6ம் இடத்திற்கு செல்லும்போது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். ஏதோ ஒரு உபத்திரவம் வரும்.
ஆனால், தானாகவே உடல் உபாதைகள் சரியாகிவிடும்.
தனுசு ராசியைப் பொருத்தவரை உங்கள் வாழ்க்கையில் உங்கள் கடமையை சரியாக செய்தால் போதும். ஹெல்த்தில் மட்டும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.
நிதிநிலைமை அவ்வளவு மோசமாக இல்லை. ஒட்டுமொத்தமாக பார்த்தால் சில விஷயங்களில் மட்டுமே தடைகள் இருக்கும். மற்றபடி உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
ராசிப்பலன் என்பது உங்கள் மனநிலையைப் பொருத்தது. லக்கினம் என்பது உங்கள் விதி என கூறலாம்.
லக்கினத்திற்கு முதல் முன்னுரிமை கொடுங்கள். லக்கினம் என்றால் சூரியன், ராசி என்றால் சந்திரன். சந்திரன் என்றால் என்றால் மனசு உடம்பு. லக்கினம் என்றால், விதியும் ஆன்மாவும் என புரிந்து கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்