Career Horoscope: ’பணம் கொட்ட தனுசு ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தொழில்கள்’-dhanusu rasi career horoscope navigating success with astrological insights - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Career Horoscope: ’பணம் கொட்ட தனுசு ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தொழில்கள்’

Career Horoscope: ’பணம் கொட்ட தனுசு ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தொழில்கள்’

Kathiravan V HT Tamil
Feb 13, 2024 09:19 AM IST

தீர்க்கமான முடிவுகளை எடுப்பதில் சிறந்து விளங்கும் தனுசு ராசிக்காரர்கள் தன்னை சுற்றி உள்ள இடங்களில் நல்லெண்ணங்களை பரப்புவார்கள்.

தனுசு ராசி
தனுசு ராசி

தீர்க்கமான முடிவுகளை எடுப்பதில் சிறந்து விளங்கும் தனுசு ராசிக்காரர்கள் தன்னை சுற்றி உள்ள இடங்களில் நல்லெண்ணங்களை பரப்புவார்கள். குருவை அதிபதியாக கொண்ட தனுசு ராசிக்காரர்கள் உறுதுணையாக வேலை பார்த்தால் கண் தெரியாதவர்கள் கூட ஜெயிப்பார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஏஜென்சி, பங்குச்சந்தை, உயரக தரகுத் தொழில்கள், உள்ளிட்ட தொழில்கள் தனுசு ராசிக்காரர்களுக்கு லாபம் சேர்க்கும். 

மருத்துவம், கல்வி, வங்கி ஆகிய துறைகளில் கவனம் செலுத்துதன் மூலம் சிறந்த வேலையையோ அல்லது நல்ல தொழிலையோ தனுசு ராசிக்காரர்களால் அமைத்துக் கொள்ள முடியும். துணி வியாபாரம், பொம்மைகள் தயாரிப்பு, விளையாட்டு பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை தொழில்கள் தனுசு ராசிக்காரர்களுக்கு ஏற்றம் தருவதாக அமையும். 

விளையாட்டுத்துறைகள் தனுசு ராசிக்காரர்களுக்கு ஈடுபாடு அதிகம் இருக்கும். விளையாட்டு துறை சார்ந்த பணி மற்றும் தொழில்களில் தனுசு ராசிக்காரர்களால் சிறந்து விளங்க முடியும். 

குரு ஞானத்தின் காரகன் என்பதால் ஞானம் தேடுவதில் ஆர்வம் கொண்டவர்களாக தனுசு ராசிக்காரர்கள் விளங்குவர். இவர்களுக்கு பொருளாதாரத்தில் வளம் பெறுவதற்கு குரு பகவான் வழிகாட்டுவார். நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபாடு செய்துவரை வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் தீரும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

Whats_app_banner

டாபிக்ஸ்