Magaram Rasi: எதிர்நீச்சல் போட்டு முன்னேறும் மகரம்! ஏற்றி விடும் கிரகம் எது? தள்ளிவிடும் கிரகம் எது என்று தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Magaram Rasi: எதிர்நீச்சல் போட்டு முன்னேறும் மகரம்! ஏற்றி விடும் கிரகம் எது? தள்ளிவிடும் கிரகம் எது என்று தெரியுமா?

Magaram Rasi: எதிர்நீச்சல் போட்டு முன்னேறும் மகரம்! ஏற்றி விடும் கிரகம் எது? தள்ளிவிடும் கிரகம் எது என்று தெரியுமா?

Kathiravan V HT Tamil
Aug 29, 2024 06:00 AM IST

மகரம் ராசியில் நீசம் பெறும் குரு பகவான் 3 மற்றும் 12ஆம் இடங்களுக்கு அதிபதியாக வருகிறார். விரைய ஸ்தானாதிபதி ராசியில் நீசம் பெறுவது யோகத்தை கொடுக்கும்.

Magaram Rasi: எதிர்நீச்சல் போட்டு முன்னேறும் மகரம்! ஏற்றி விடும் கிரகம் எது? தள்ளிவிடும் கிரகம் எது என்று தெரியுமா?
Magaram Rasi: எதிர்நீச்சல் போட்டு முன்னேறும் மகரம்! ஏற்றி விடும் கிரகம் எது? தள்ளிவிடும் கிரகம் எது என்று தெரியுமா?

தர்ம காரியங்கள் மீது ஆர்வம் 

கடந்த ஏழரை ஆண்டுகளில் மகரம் ராசிக்காரர்கள் பல துன்பங்களை சந்தித்து வருகின்றனர்.  தர்ம காரியங்களை விரும்பி செய்யக்கூடிய எண்ணம் மகரம் ராசிக்காரர்களுக்கு உண்டு. 

மகரம் ராசிக்காரர்கள் உடன் பிறந்தவர்கள் நன்றாக படிக்கும் வாய்ப்புகள் இருக்கும். இவர்களுக்கு இதயம், உஷ்ணம், தோல் சம்பந்தப்பட்ட வாய்ப்புகள் அதிகம். 

அடுத்தவர்களுக்கு உதவுவதில் மகரம் ராசிக்காரர்கள் தயங்கமாட்டார்கள். எத்தனை பிரச்னைகள் வந்தாலும் தவறான வார்த்தைகளை பிரயோகிக்கமாட்டார்கள். 

வாழ்கையின் பிற்பகுதியில் வெற்றி 

மகரம் ராசிக்கும், லக்னத்திற்கும் அதிபதி ஆவார். லக்னம் எனப்படும் முதலிடம் ஆனது உயிர், ஆத்மா, வாழ்கை ஆகியவற்றை குறிக்கின்றது. 

இரண்டாம் இடம் ஆனது தனம், வாக்கு, குடும்பம் ஆகியவற்றை கொண்டு வரும். தொடக்க காலத்தில் முதல் பாதியில் மகரம் ராசியினர் பல சிரமங்களை சந்தித்தாலும் கூட மறுபகுதி வாழ்கையில் மிகப்பெரிய உயர்வை அடைவீர்கள். 

மகரம் ராசியில் நீசம் பெறும் குரு பகவான் 3 மற்றும் 12ஆம் இடங்களுக்கு அதிபதியாக வருகிறார். விரைய ஸ்தானாதிபதி ராசியில் நீசம் பெறுவது யோகத்தை கொடுக்கும். 

உபஜெய ஸ்தானம் எனப்படும் பாதி மறைவு ஸ்தானத்தில் குரு பகவான் ஆட்சி உள்ளதால் பல மகரம் ராசிக்காரர்கள் தங்களின் வயோதிக காலத்தில் ஆன்மீகம் நோக்கி ஆழமாக ஈடுபடுவீர்கள். இயற்கையாகவே இவர்களுக்கு தெய்வ பக்தி அதிகம் இருக்கும். 

மருத்துவம், அரசியல், கட்டுமானத்துறை, கல்வித்துறை, காவல்துறை, நிர்வாகத்துறைகளில் மகரம் ராசியினர் சிறப்பாக கோலோச்சுவார்கள். 

தந்தையின் அடையாளத்தை தனது பின்னால் வைத்துக் கொள்ளாமல் தனது அடையாளத்தை தந்தையின் பின்னால் வைத்துக் கொள்ளும் அளவுக்கு இவர்களின் செயல்பாடுகள் இருக்கும். தன்னுடைய சொந்த உழைப்பால் பெயர், புகழ், செல்வாக்கு, செல்வத்தை சேர்க்கும் நிலை இவர்களுக்கு இருக்கும். 

சுக்கிரனால் யோகம்

4ஆம் இடம் மற்றும் 11ஆம் இடத்திற்கு அதிபதியாக வரக்கூடிய செவ்வாய் பகவான் மூலம் மகரம் ராசிக்காரர்களுக்கு நீரிழிவு அல்லது ரத்தம் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் கவனம் அவசியம். 

11ஆம் இட அதிபதியாக செவ்வாய் பகவான் உள்ளதால் வருமானம் வரக்கூடிய இடங்களில் மிகப்பெரிய போட்டியும். பொறாமையும் நிறைந்து காணப்படும். 

5 மற்றும் 10 ஆம் இடங்களுக்கு அதிபதியாக சுக்கிர பகவான் உள்ளார். மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் எங்கு உள்ளார் என்ற நிலையை வைத்தே வாழ்கை அமையும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Whats_app_banner