அழகான ஆறுமுகம் - அருணகிரிநாதர் விளக்கம்
முருகனின் அழகான ஆறு முகங்களுக்கு அருணகிரிநாதர் விளக்கம் தந்துள்ளார்.
தமிழர்கள் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக முருகன் கோயில் இருக்கும், ஏனென்றால் முருகனின் மீது அதீத பக்தி கொண்டவர்கள் தமிழர்கள். அதனால் தான் அவர் தமிழ் கடவுள் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.
முருக பக்தர்களை ராகு கேது கூட நெருங்கப் பயப்படுவார்கள், ஏனென்றால் அவர் அக்னி வம்சத்தைச் சேர்ந்தவர். என்பது ஐதீகம். ஆறுபடை வீட்டுக்குச் சொந்தக்காரன் நான் இருக்கும் முருகன். தன் பக்தர்களுக்காக எதையும் செய்யக்கூடியவர், அதனால்தான் முருகனுக்கு எண்ணிலடங்கா பக்தர்கள் உள்ளனர்.
ராகு கேது தோஷம், சூரிய தோஷம் உள்ளிட்ட பல தோஷங்களைக் கொண்டவர்கள் முருகனை வழிபாடு செய்தால் நிவர்த்தியாகும். அழகிலும், வீரத்திலும், கருணையிலும் முருகனுக்கு ஈடு-இணையே இல்லை என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அழகு முகம் கொண்ட ஆறுமுகனை அவரது பக்தரான அருணகிரிநாதர் புகழ்ந்து பல பாடல்கள் பாடியுள்ளார். அதில் முருகனின் ஆறு முகத்தின் அழகைப் பற்றி விளக்கம் கொடுத்துள்ளார், அவற்றை நாம் காண்போம்.
அழகான ஆறுமுகம்
மயில் மீது ஏறி நின்று விளையாடும் முகம் ஒன்று
சம்ஹாரம் செய்வதற்கு அன்னையிடம் வேல் வாங்கிய முகம் ஒன்று
சிவனுக்கு ஓங்காரம் உரைத்த முகம் ஒன்று.
சூரனை வதைத்த முகம் ஒன்று.
வள்ளியை மணம் புரிய வந்த முகம் ஒன்று.
மக்களின் வினைகளைத் தீர்க்கும் முகம் ஒன்று.
அழகென்ற சொல்லுக்கு முருகா, இந்த சொல்லுக்கேற்ப மக்களுக்கு அழகாய் தனது ஆசியைத் தரும் முருகனைத் தொழுவது பல நன்மைகளைத் தரும்.