Tomorrow Horoscope: மேஷம் முதல் மீனம் வரை! நாளைய தினம் பணத்தில் குளிக்க போகும் 6 ராசிகள்! கவலைபட போகும் 6 ராசிகள்!-daily horoscopes for august 22 mesham to meenam discover your zodiac signs predictions - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tomorrow Horoscope: மேஷம் முதல் மீனம் வரை! நாளைய தினம் பணத்தில் குளிக்க போகும் 6 ராசிகள்! கவலைபட போகும் 6 ராசிகள்!

Tomorrow Horoscope: மேஷம் முதல் மீனம் வரை! நாளைய தினம் பணத்தில் குளிக்க போகும் 6 ராசிகள்! கவலைபட போகும் 6 ராசிகள்!

Kathiravan V HT Tamil
Aug 21, 2024 03:52 PM IST

Daily Horoscope August 22: ஆகஸ்ட் 22ஆம் தேதி வியாழக்கிழமை. வியாழக்கிழமை திருமாளுக்கு உகந்த நாள் ஆகும். இந்த நாளில் விஷ்ணு பகவானை வழிபடுவதன் மூலம் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கி மகிழ்ச்சி, வளம் மற்றும் நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.

aaj ka rashifal 22 august horoscope
aaj ka rashifal 22 august horoscope

ஆகஸ்ட் 22ஆம் தேதி வியாழக்கிழமை. வியாழக்கிழமை திருமாளுக்கு உகந்த நாள் ஆகும். இந்த நாளில் விஷ்ணு பகவானை வழிபடுவதன் மூலம் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கி மகிழ்ச்சி, வளம் மற்றும் நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கான 12 ராசிகளுக்குமான ஜோதிட பலன்களை தற்போது பார்க்கலாம். 

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் நல்ல தருணங்களை தரக்கூடிய நாளாக உள்ளது. உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும், ஆனால் யாரிடமாவது பேசும் போது சற்று கவனமாக இருப்பது அவசியம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வேலை தேடும் மேஷம் ராசிக்காரர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். 

ரிஷபம் 

வேலையை மாற்ற விரும்பும் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் மீதான நம்பிக்கை கூடும். அரசாங்கத்தின் ஆதரவைப் பெறுவீர்கள்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு கடினமான நாளாக இருக்கும். சிலருக்கு மனம் குழப்பம் உண்டாகலாம் ஆனாலும் உங்கள் இலக்கில் கவனமாக இருங்கள். உங்களுக்கும் தன்னம்பிக்கை குறையலாம். இருப்பினும் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். உங்கள் பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். 

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் மனதில் இனம்புரியாத கவலைகள் இருக்கலாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் கூடும். வேலையில் மாற்றம் இருக்கலாம். கடின உழைப்பு அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் சில இடமாற்றங்களை சந்திக்க நேரிடலாம். அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வருமானம் அதிகரிக்கும். 

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நாளில் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் முடிக்க வேண்டும் என்று எண்ணும் வேலைகளை முடிப்பீர்கள். போதுமான பணவரவுகள் கிடைக்கும். உயர் கல்வியில் உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கும். அறிவார்ந்த பணி மூலம் வருமானம் அதிகரிக்கும். இன்று உங்கள் உடல்நலம் மற்றும் உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். காய்ச்சல் அல்லது தொற்று ஏற்படலாம். சிலர் தங்களின் குடும்பத்தில் சொத்துக்களை பிரிப்பது குறித்த பரிசீலனையில் ஈடுபடலாம். 

விருச்சிகம் 

விருச்சிக ராசியினருக்கு சாதகமான நேரம். உங்களுக்குப் பணம் வெவ்வேறு இடங்களிலிருந்து வருகிறது, ஒரே இடத்திலிருந்து அல்ல. தொழிலிலும் மாற்றங்கள் வரும். எனவே, இந்த மாற்றங்களை நன்கு ஏற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள், அப்போதுதான் நீங்கள் முன்னேற முடியும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இந்த நாளில் முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். போதுமான பணவரவு இருக்கும். முதலீடு தொடர்பான முன்னெடுப்புகளில் தீவிர ஆய்வுகளுக்கு பிறகு முடிவு எடுப்பது நன்மைகளை தரும். 

மகரம்

மகரம் ராசிக்காரர்கள் அதிக தூரம் பயணிப்பதை தவிர்ப்பது நலம் தரும். முதலீடு செய்யும் மகரம் ராசிக்காரர்கள் கவனமாக செயல்படுவது முக்கியம். முதலீட்டு நிபுணருடன் கலந்தாலோசித்த பின்னரே முதலீடு செய்யுங்கள். 

கும்பம் 

கும்பம் ராசிக்காரர்களுக்கு இன்று லாப வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நாளில் உங்கள் வேலைகளை தள்ளிபோஒடாமல்  முழுமையாக செயல்பட முயற்சி செய்யுங்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் புதிய தொழில் தொடங்கலாம். கூட்டுத் தொழில் செய்ய விரும்பும் கும்பம் ராசிக்காரர்களுக்கு நன்மைகள் கிடைக்கும். 

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு நன்மைகள் நிறந்த நாளாக இருக்கும். நீங்கள் முன்னேற வாய்ப்புகள் உள்ளன. பணவரவு திருப்திகரமாக இருக்கும் என்பதால் ஆக்கப்பூர்வ பணிகளில் கவனம் செலுத்தவும்.