Daily Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ இந்த நாளில் அசத்த போகும் ராசி எது? சொதப்ப போகும் ராசி எது? இன்றைய ராசிபலன்கள்!-daily horoscope results for 3nd september mesham to meenam zodiac overview - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Daily Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ இந்த நாளில் அசத்த போகும் ராசி எது? சொதப்ப போகும் ராசி எது? இன்றைய ராசிபலன்கள்!

Daily Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ இந்த நாளில் அசத்த போகும் ராசி எது? சொதப்ப போகும் ராசி எது? இன்றைய ராசிபலன்கள்!

Kathiravan V HT Tamil
Sep 03, 2024 06:00 AM IST

Daily Horoscope: ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. கிரக விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. செப்டம்பர் 3 ஆம் தேதி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.

Daily Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ இந்த நாளில் அசத்த போகும் ராசி எது? சொதப்ப போகும் ராசி எது? இன்றைய ராசிபலன்கள்!
Daily Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ இந்த நாளில் அசத்த போகும் ராசி எது? சொதப்ப போகும் ராசி எது? இன்றைய ராசிபலன்கள்!

மேஷம் 

மேஷம் ராசிக்காரர்களுக்கு தொழில், ஆரோக்கியம் போன்ற விஷயங்களில் இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் செலவுகளில் கவனமாக இருக்க வேண்டும். இந்த நாளில் சிலர் பயணம் செய்ய திட்டம் இடலாம். வேலையில் முன்னேற்றமும், லாபமும் உண்டு. உங்கள் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். உங்கள் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் சில புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும் நேரத்தை முதலீடு செய்ய இது ஒரு நல்ல நாளாக இருக்கும்.

ரிஷபம் 

ரிஷபம் ராசிக்காரர்கள் இன்று நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். செருக்கு இல்லாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். உங்கள் கடின உழைப்பால் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். ஒரு புதிய பணியைப் பெறுவதற்கான பெரிய வாய்ப்பும் உள்ளது. அலுவலக சீனியர்களிடம் கவனம் ஆக இருப்பது அவசியம். அலுவலகத்தில் ஆலோசனைகள் உங்கள் ஜூனியர்களிடம் இருந்து வந்தாலும் அதனை திறந்த மனதோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்கள் இன்று எண்ணெய் உணவுகளை தவிர்க்கவும். அலுவலகத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். தொழிலதிபர்கள் தங்கள் வேலையை விரிவுபடுத்தி நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இந்த நாளில் நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். 

கடகம் 

கடகம் ராசிக்காரர்களே, இன்று உங்கள் ஆரோக்கியம் மற்றும் காதல் வாழ்க்கை சீரானதாக இருக்கும். உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வியாபாரம் செய்பவர்களுக்கு பணத்தட்டுப்பாடு ஏற்படலாம். உடல்நலனின் கவனம் செலுத்துங்கள். இன்று நீங்கள் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். மன அழுத்தத்திலிருந்து விலகி இருங்கள். உங்கள் இலக்கை அடைய நீங்கள் நிறைய முயற்சிகள் செய்ய வேண்டியிருக்கும்.

சிம்மம் 

சிம்மம் ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கலாம். நிதி நிலைமை எதிர்பார்த்தபடி இருக்கும். ஆனால் சில எதிர்பாராத செலவுகள் விஷயங்களைக் கெடுக்கும். உங்கள் நாளின் ஆரம்பம் நன்றாக இருக்கும் ஆனால் முடிவு அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. அலுவலக அரசியல் உங்கள் வேலையின் வேகத்தைக் குறைக்கும். எனவே, மன அழுத்தத்தைத் தவிர்க்க சற்று பொறுமையை கடைப்பிடிக்கவும். 

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் செலவுகள் கூடும். கூட்டுத் தொழில் செய்பவர்களிடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். இன்று உங்களின் தொழிலில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும். வாழ்க்கையில் சமநிலையை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் நிதி நிலையில் கவனமாக இருக்க வேண்டும். மாலைக்குள் ஓரளவு நிம்மதி கிடைக்கும்.

துலாம் 

துலாம் ராசிக்காரர்களில் சிலர் இன்றைய தினம் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் லாபம் நன்றாக இருக்கும். பலரிடம் இருந்து பாராட்டுக்களை பெறுவீர்கள். பதவி உயர்வு பெற அலுவலகப் பணிகளை முழு ஈடுபாட்டுடன் முடிக்க வேண்டும். நிதி ரீதியாக நல்ல நாளான இன்று  புதிய தொழில் வாய்ப்புகள் உங்களுக்கு வரக்கூடும்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்படலாம். சிலர் காதல் வயப்படலாம். திட்டங்கள் என நீங்கள் நினைத்து இருப்பது தவறாக இருக்கலாம் என்பதால் கவனமுடன் செயல்படுவது முக்கியம். 

தனுசு 

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நன்றாக இருக்கும். இந்த நாளில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். அலுவலகத்தில் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். வியாபாரிகள் பணியாளர்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சக ஊழியர்களுடன் பழகும் போது கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு இன்று பணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் உங்கள் மன ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வியாபாரம் செய்யும் சிலர் உங்கள் கூட்டாளிகளை மாற்ற நேரலாம். வாழ்க்கையில் பிரச்சனைகள் வருவது சகஜம் என்பதால் நிதானத்தை கடைப்பிடிக்கவும். நாளின் தொடக்கத்தில், உங்கள் தொழில் சம்பந்தமாக நீங்கள் போராடலாம். அதிக வேலை அழுத்தத்தை உணர்வீர்கள். தைரியத்தை இழக்காதீர்கள் மற்றும் நேர்மறையாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்கள் இந்த நாளில் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியம். வியாபாரம் செய்பவர்கள் மிகுந்த கவனம் உடன் செயல்பட வேண்டும். உங்கள் வாழ்க்கை துணையுடன் நெருக்கத்தை அதிகப்படுத்துங்கள். உங்கள் திட்டமிடலில் சில சிக்கல்கள் உண்டாகலாம். உங்களுக்கு நம்பிக்கையில் குறைவு ஏற்படலாம். இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மீனம் 

மீனம் ராசிக்காரர்களே, இன்று பண விஷயங்களில் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும் என்பதால் கவனம் முக்கியம். வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் இன்று கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். இன்று செலவுகள் அதிகரிக்கலாம். தன்னம்பிக்கை குறையலாம். உங்கள் இலக்குகளை அடைய முடியாமல் போகலாம். மன அழுத்தத்தைத் தவிர்க்க தியானம் செய்யவும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.