Daily Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ இந்த நாளில் அசத்த போகும் ராசி எது? சொதப்ப போகும் ராசி எது? இன்றைய ராசிபலன்கள்!-daily horoscope results for 22th september mesham to meenam zodiac overview - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Daily Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ இந்த நாளில் அசத்த போகும் ராசி எது? சொதப்ப போகும் ராசி எது? இன்றைய ராசிபலன்கள்!

Daily Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ இந்த நாளில் அசத்த போகும் ராசி எது? சொதப்ப போகும் ராசி எது? இன்றைய ராசிபலன்கள்!

Kathiravan V HT Tamil
Sep 22, 2024 06:00 AM IST

Daily Horoscope: ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. கிரக விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது.

<p>கோள்களின் இயக்கத்தைப் பொறுத்தவரை ஆகஸ்ட் மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், வெள்ளி உள்ளிட்ட 4 முக்கிய கிரகங்கள் இம்மாதத்தில் சஞ்சரிக்கும். இது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்துகிறது.</p>
<p>கோள்களின் இயக்கத்தைப் பொறுத்தவரை ஆகஸ்ட் மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், வெள்ளி உள்ளிட்ட 4 முக்கிய கிரகங்கள் இம்மாதத்தில் சஞ்சரிக்கும். இது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்துகிறது.</p>

மேஷம்

மேஷம் ராசிக்காரர்கள் இன்று நண்பர் ஒருவரின் உதவியை பெறலாம். கல்வி துறையுடன் தொடர்புடையவர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். இன்று ஈகோவில் இருந்து விலகி இருங்கள். முதலீட்டுக்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரிகளுக்கு நல்ல நாளாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். ஆரோக்கியம் சிறந்து விளங்கும். பொருளாதார ரீதியாக வளம் பெறுவீர்கள். சில முக்கியமான வேலைகளுக்காக வெளியூர் பயணம் செய்ய நேரிடும். காதல் உறவில் சில சிக்கல்கள் ஏற்படலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்கள் இன்று சில நஷ்டங்களை சந்திக்க நேரலாம். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும், இல்லை எனில் பணம் பற்றாக்குறைக்கு ஆளாக நேரிடும். யாருக்கும் கடன் கொடுப்பதை தவிர்க்கவும். 

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் நாளாக இன்று இருக்கும். தந்தையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். பெரியோர்கள் ஆசி உங்களுக்கு கிடைக்கும். வீட்டில் கொண்டாட்டம் இருக்கலாம். உங்கள் பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். 

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்கள் புத்திசாலிதனத்தை பயன்படுத்தி பணம் ஈட்டுவீர்கள். பெரிய பண பிரச்சினைகள் எதுவும் இருக்காது. குடும்ப பொறுப்புகளை சிறப்பாக செய்வீர்கள். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். உங்கள் தடைபட்ட எந்த வேலையையும் செய்ய முடியும். வியாபாரிகளுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். புதிய மூலங்களில் இருந்து பணம் வரும். பழைய முதலீடுகளில் இருந்து பணம் கிடைக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பழைய நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள். வாழ்க்கை துணை உணர்வுகளை அலட்சியப்படுத்தாதீர்கள். பணியிடத்தில் உங்கள் பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்கார்களுக்கு செலவுகள் அதிகரிக்கலாம். வரவுக்கும் செலவுக்கும் இடையில் சமநிலையை கடைப்பிடிக்கவும். எதிர்காலத்திற்காக பணம் சேமிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள். அலுவலக அரசியலில் இருந்து விலகி இருங்கள். வேலையில் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இன்று மனம் எதையோ நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். ஆற்றல் உடன் செயல்படுவீர்கள். இன்றைய நாளின் பொறுப்புகளை சிறப்பாக முடிப்பீர்கள். மூதலீடுகளை கவனமாக செய்யுங்கள். நிதி விவகாரங்களில் அடையாளம் தெரியாத நபரை நம்ப வேண்டாம். 

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இயல்பான நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வாழ்கை துணையின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம். வாழ்கை துணையிடம் ஆலோசனை செய்த பிறகே முடிவுகளை எடுங்கள். உணவுகள் சாப்பிடுவதில் கவனம் செலுத்தவும்.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். உங்கள் சௌகரியங்கள் அதிகரிக்கும். தந்தையின் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது அவசியம். இன்று அலுவலகத்தில் வேலைகளை உற்சாகமாக முடிப்பீர்கள். இன்றைக்கு அலுவலகத்தில் இருக்கும் சீனியர் ஒருவர் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம், அதற்கு உங்கள் செயல்திறனால் பதில் சொல்லுவீர்கள். 

கும்பம்

கும்பம் ராசிக்கார்களுக்கு முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். சொத்து தொடர்பான பிரச்னைகள் தீர்வுக்கு வரும். நீதிமன்றத்தில் வெற்றி சாத்தியமாகும். உங்கள் வாழ்க்கைத் துணை ஆதரவாக இருப்பார். பணத் தேவைகள் பூர்த்தி ஆகும். 

மீனம்

மீனம் ராசிக்கார்களுக்கு ஏற்ற இறக்கம் நிறைந்த நாளாக இருக்கும். தந்தையின் உதவியால் நிதிவரவு ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உடல்நலம் தொடர்பான பெரிய பிரச்சினைகள் எதுவும் இருக்காது. வியாபாரிகளுக்கு நல்ல நாளாக இருக்கும். 

Whats_app_banner