Cold-Hearted Zodiacs : இரக்கமற்ற மனம் கொண்ட 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா? கூட்டத்துடன் சேராமல் விலகியும் இருப்பார்கள்!-cold hearted zodiacs do you know who are the 5 cold hearted zodiacs - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Cold-hearted Zodiacs : இரக்கமற்ற மனம் கொண்ட 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா? கூட்டத்துடன் சேராமல் விலகியும் இருப்பார்கள்!

Cold-Hearted Zodiacs : இரக்கமற்ற மனம் கொண்ட 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா? கூட்டத்துடன் சேராமல் விலகியும் இருப்பார்கள்!

Priyadarshini R HT Tamil
Jan 21, 2024 08:30 AM IST

Cold-Hearted Zodiacs : இரக்கமற்ற மனம் கொண்ட 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

Cold-Hearted Zodiacs : இரக்கமற்ற மனம் கொண்ட 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
Cold-Hearted Zodiacs : இரக்கமற்ற மனம் கொண்ட 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

அதன் அடிப்படையில் சில ராசிக்காரர்கள் இரக்கமற்ற இதயம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் உணர்வு ரீதியாக மற்றவர்களுடன் சேராமல் விலகியும் இருப்பார்கள். நீங்கள் ஜோதிடத்தை நம்புகிறவர் என்றால், இந்த ராசிக்காரர்கள்தான், இரமற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒரு குழந்தை கீழே விழுந்தால் கூட அவர்கள் மீது இரக்கம் காட்ட மாட்டார்கள். அந்த குழந்தையை தூக்கிவிடுவது தங்களின் பணியல்ல என்பதுபோல் செல்வார்கள். 

மகரம்

கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள். இவர்கள் இலக்கை நோக்கி பயணிப்பவர்களாகவும், எதார்த்தத்தில் வாழ்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் வாழ்வில் மிகவும் பொறுப்பானவர்களாக இருப்பார்கள். எனினும், சாதனைகளில் அவர்களின் கவனம் இருப்பதால், இவர்கள் அமைதியாகவும், உணர்வு ரீதியாக யாருடனும் நெருங்காமலும் இருப்பார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். அவர்கள் தங்கள் சுதந்திரத்தை மதிப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதார்த்தமாகவும், காரணங்களின் அடிப்படையில் செயல்படுபவர்களாகவும் இருப்பார்கள். 

அவர்கள் எல்லாவற்றையும் ஆய்ந்தறிந்து செயல்படுபவர்கள் என்பதால் உணர்வு ரீதியாக இவர்கள் விலகியே இருப்பார்கள். இவர்கள் உணர்வுரீதியாக அன்றி மிகவும் எதார்த்தமாக நடந்துகொள்வது இவர்களை உறவில் உணர்வு ரீதியாக அனைத்திலிருந்தும் விலக்கி வைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் ஆழ்ந்த உணர்வுமிக்கவர்கள். இவர்களின் கலவையான குணத்தை சிலர் சில நேரங்களில் தவறாக புரிந்துகொள்வார்கள். இவர்கள் தங்கள் உணர்வுகளை பாதுகாப்பதால், இவர்கள் மற்றவர்களிடம் விலகியிருப்பது போன்ற தோற்றம் ஏற்படும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் விரிவாகன விளக்கங்களையும், பகுப்பாய்வுகளையும் கோருபவர்கள். இவர்கள் மிகுந்த அக்கறை நிறைந்தவர்களாக இருப்பார்கள். வாழ்வில் இவர்களின் எதார்த்தமான அணுகுமுறை, இவர்கள் உணர்வுகளை குறைவாக வெளிப்படுத்துபவர்களாக காட்டும். சில சூழல்களில் இவர்கள் மற்றவர்களுக்கு சிறிது கடுமையாக தெரிவார்கள்.

தனுசு

தனுசு ராசிக்கார்ரகளும் சுதந்திரமாக செயல்படுபவர்களாகவும், தங்கள் சுதந்திரத்தை மதிப்பவர்களாகவும் இருப்பார்கள். சாகசங்களின் மீதான அவர்களின் காதல் சில சமயங்களில் அவர்களை உணர்வு ரீதியாக பிரித்து காட்டும். இவர்கள் தங்களின் தனிப்பட்ட வளர்ச்சியை மிகவும் மதிப்பார்கள். வாழ்வில் புதிய அனுபவங்களை பெறுவார்கள்.

பொறுப்புத் துறப்பு - 

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல் அல்லது பொருள் அல்லது கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் அல்லது ஜோதிடர்கள் அல்லது பஞ்சாங்கங்கள் அல்லது சொற்பொழிவுகள் அல்லது நம்பிக்கைகள் மற்றும் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. துல்லிய விவரங்களை தெரிந்துகொள்ள அதற்குரிய நிபுணர்களை அணுகுவதே சிறந்தது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்