Chidambaram Temple: ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Chidambaram Temple: ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்

Chidambaram Temple: ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 28, 2022 03:47 PM IST

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றுத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இன்று தொடங்கிய இந்த விழா ஜனவரி 8ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆருத்ரா தரிசன விழா
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆருத்ரா தரிசன விழா

இதையடுத்து நடராஜர் கோயில் உள்பட சிவபெருமானின் பஞ்ச சபைகளிலும் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா எனப்படும் திருவாதிரை திருவிழா கோலாகலமாக நடைபெறும்.

இதையடுத்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. கோயிலில் சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்தி வீற்றிருக்கும் சன்னசி எதிரே அமைந்திருக்கும் கொடிமரத்துக்கு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டது.

இதன் பின்னர் பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் திருவாதிரை திருவிழா கொடியேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஏராமான பக்தர்கள் பங்கேற்றி சுவாமியை தரிசித்தனர். இந்த விழா நடைபெறும் 10 நாள்களிலும் பஞ்சமூர்த்தி வீதி உலா உற்சவம் நடைபெறுகிறது.

அதன்படி, இன்று இரவு பஞ்ச மூர்த்திகள் தங்கம், வெள்ளி வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. டிசம்பர் 29ஆம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன உலா, டிசம்பர் 30ஆம் தேதி சூரிய பிறை வாகன உலா, டிசம்பர் 31ஆம் தேதி வெள்ளி பூதி வாகன உலா ஆகியவை நடைபெறுகிறது.

ஜனவரி 1ஆம் தேதி கோபுர தரிசனம், ஜனவரி 2ஆம் தேதி வெள்ளி யானை வாகன உலா, ஜனவரி 3ஆம் தேதி தங்க கைலாச வாகன உலா, ஜனவரி 4ஆம் தேதி தங்க ரத சாமி வீதி உலா, ஜனவரி 5ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் ஜனவரி 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாம சுந்தரி அம்பாள் சமேத ஆனந்த நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்த பின்னர், காலை 6 மணி முதல் திருவாபரண அலங்கார காட்சி நடைபெறுகிறது.

பின்னர் மதியம் 2 மணிக்கு ஆயிரம்கால் மண்டபமான ராஜசபையில் நடராஜரும், அம்பாளும் எழுந்தருளும் ஆருத்ரா தரிசனம் நடைபெறவுள்ளது.

இதைத்தொடர்ந்து ஜனவரி 7 பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் உலா வருதல், ஜனவரி 8ஆம் தேதி ஞானபிரகாச குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறும்.

ஆருத்ரா தரிசனத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பொதுதீட்சிதர்கள் குழு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்