வக்ரம் பெற்றார் செவ்வாய்! மேஷம் முதல் கன்னி வரை வாட்டி வதங்க போகும் ராசிகள்!
நவ கிரகங்களின் தளபதி எனப்படும் செவ்வாய் பகவான் கடகம் ராசியில் டிசம்பர் 7ஆம் தேதியான இன்றைய தினம் காலை 05:01 மணிக்கு தொடங்கி வக்ர நிலை பெற்று உள்ளார். அடுத்து வரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 24 தேதி வரை செவ்வாய் பகவான் வக்ர நிலையில் இருப்பார்.
நவ கிரகங்களின் தளபதி எனப்படும் செவ்வாய் பகவான் கடகம் ராசியில் டிசம்பர் 7ஆம் தேதியான இன்றைய தினம் காலை 05:01 மணிக்கு தொடங்கி வக்ர நிலை பெற்று உள்ளார். அடுத்து வரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 24 தேதி வரை செவ்வாய் பகவான் வக்ர நிலையில் இருப்பார். செவ்வாய் பகவானின் இந்த நிலை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கு சுபமான மற்றும் அசுபமான விளைவை ஏற்படுத்தும்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்கள் ரியல் எஸ்டேட் தொடர்பான முதலீடுகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வீடு, வாகனங்கள் போன்ற பெரிய முதலீடுகளுக்கு இப்போது சரியான நேரம் இல்லை. உங்கள் காப்பீட்டை மதிப்பாய்வு செய்வதிலும், நீண்ட கால முதலீட்டு வாய்ப்புகளை அவசரப்படாமல் ஆராய்வதிலும் கவனம் செலுத்துங்கள். பங்குச் சந்தை முதலீடுகளில் சில சிக்கல்கள் வரும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் வக்ர பெயர்ச்சி ஆனது சில கருத்து வேறுபாடுகளையும், விரக்தியையும் உண்டாக்கும். பேச்சில் நிதானமும், பொறுமையும் தேவை. அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும்
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்கள் பணம் தொடர்பான விவகாரங்களில் கவனம் தேவை. உங்கள் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. சேமிப்பு மற்றும் சொத்து தொடர்பான பிரச்னைகள் தீரும். நிதி சார்ந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். பல்வேறு பிரச்னைகளில் தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். வார்த்தைகளில் மிக கவனம் தேவை.
கடகம்
கடகம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் வக்ர பெயர்ச்சி பதற்றத்தை உண்டாக்கும். எரிச்சலும், அலைச்சலும் சந்திக்க வேண்டி இருக்கும். செய்யும் வேலைகளை தேக்க நிலை அடையாமல் செய்ய வேண்டும். தொழில் சார்ந்த விவகாரங்களில் கவனம் தேவை. அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்கள் பிரச்னைகளில் கவனமாக இருப்பது முக்கியம். உங்கள் செயல்களை கவனமாக கண்காணிக்கவும். விரக்தி மனநிலையில் இருந்து விலகி ஆனந்தமாக இருங்கள். இந்த காலகட்டத்தில் புதிய திட்டங்களை தொடங்குவதை தவிர்க்கவும். பிரச்னைகள் இருந்தாலும் வளர்ச்சி பாதையில் பயணிப்பீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தங்கள் செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலம். நட்பு மற்றும் உறவுகளில் இருந்து சிக்கல்கள் வரலாம். புதிய திட்டங்களை தொடங்கும் போது கவனமாக இருக்கவும். தொழில் கூட்டாளிகள் உடன் கவனம் தேவை. குடும்ப விவகாரங்களில் கவனமாக இருக்கவும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்