Chandrashtama Days 2024: சந்திராஷ்டம நாளில் இதை மட்டும் செய்ய மறக்காதீங்க..!
சந்திராஷ்டம நாளில் எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்கும் முன்பு குலதெய்வத்தையும், இஸ்ட தெய்வத்தையும் வணங்கி விட்டு ஆரம்பித்தால் எல்லாம் நன்மையாகவே முடியும்.
சந்திராஷ்டமம் என்றால் சந்திரன் + அஷ்டமம் = சந்திராஷ்டமம் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் இரண்டே கால் நாட்களைத்தான் சந்திராஷ்டம காலம் என்கிறோம்.
சந்திராஷ்டமம் என்றால், அன்றைக்கு எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளிலும் ஈடுபடக்கூடாது என்று கூறுவார்கள். அதற்குக் காரணம், ஒருவரின் மனதுக்கு அதிபதி சந்திரன். அவர் ஒரு ராசிக்கு 8-வது வீட்டில் மறைவு பெற்றிருக்கும்போது மனதில் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். மனம் அமைதி இன்றி தவிக்கவும் நேரிடும். எனவே, சந்திராஷ்டமம் தினத்தன்று எந்தவித புது முயற்சியிலும் ஈடுபடாமல் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.
சந்திராஷ்டமம் என்றாலே இன்றைக்கு எல்லோர் மனதிலும் ஒரு அச்ச உணர்வு ஏற்படுகிறது. ஆனால், அதைக் கண்டு பயப்படத் தேவையில்லை. இது எல்லா நட்சத்திரக்காரர்களுக்கும் தொல்லை தராது. மேலும், ரிஷபம் மற்றும் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் நல்லது மட்டுமே செய்யும் என்பது ஜோதிடர்கள் கருத்தாகும். திருமணம், கிரகப்பிரவேசம், உள்ளிட்ட சுப நிகழ்வுக்கும் ஜோதிடர்கள் இந்த தினத்தை தவிர்த்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் சுப நிகழ்வை நடந்துபவர் மட்டுமல்லாமல் அவரின் பெற்றோருக்கும் சந்திராஷ்டமம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
அதற்காக சந்திராஷ்டம நாளில் எந்த வேலையும் செய்யாமல், வெளியில் போகாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டுமா? என்றால் அதுவும் கிடையாது. சந்திராஷ்டம நாளில் எந்த ஒரு செயலையும் தொடங்கும் முன்பு குலதெய்வத்தை வணங்குவது சிறந்ததாகும். சந்திராஷ்டம நாளில் எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்கும் முன்பு குலதெய்வத்தையும், இஸ்ட தெய்வத்தையும் வணங்கி விட்டு ஆரம்பித்தால் எல்லாம் நன்மையாகவே முடியும்.
சந்திராஷ்டம தினத்தில் காலை எழுந்தவுடன் குளித்து முடித்து விட்டு, சந்திரனை நினைத்து 'ஓம் ஸ்ரீ சந்திராய நமஹ' என்ற மந்திரத்தை உச்சரித்துவிட்டு அதன் பின்பு உங்களுடைய அன்றாட பணிகளைத் தொடங்கினால் சந்திராஷ்டமத்தால் உங்களுக்கு பெரிய பிரச்னைகள் எதுவும் வராது. சந்திராஷ்டம நாளில் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். அம்மன் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வரலாம்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்