Bhagavathi Amman: கோலாகலமாகத் தொடங்கிய பகவதி அம்மன் தேரோட்டம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் இன்று தேரோட்டம் தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக விளங்கும் பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா கடந்த மே 24ஆம் தேதி என்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா தொடங்கியதிலிருந்து தினமும் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. மேலும் அம்மன் வாகனத்தில் பவானி அவர்கள் உள்ளிட்டவை நடைபெற்றன.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் தேரோட்டம் நடக்கின்றது. தேர் நிலைக்கு வந்த பிறகு அன்னதானம் மற்றும் காஞ்சிபுரம் நடக்கிறது. மாலை ஆறு மணிக்கு மேல் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இரவு 9 மணிக்கு மேல் வெள்ளிக்கிழமை வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. பத்தாம் நாள் திருவிழாவான நாளை காலை 9 மணிக்கு மேல் அம்மன் பாராட்டு எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு மேல் தெப்பத் திருவிழாவும், 11 மணிக்கு முக்கடல் சங்கத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் கோயில் நிர்வாகம் செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோயில் திருத்தி இருட்டு நிகழ்ச்சியை முன்னிட்டு கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த திருத்தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தேரோட்டத்தை முன்னிட்டு விவேகானந்தர் நினைவு மண்டபம், விவேகானந்தா கேந்திர தொழிலாளர்கள் குடும்பத்தோடு பங்கேற்கவும், சுற்றுலாப் பயணிகள் கலந்து கொள்ளவும் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட இடத்திற்குப் படகு போக்குவரத்து இரண்டு மணி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி காலை 8 மணிக்குத் தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து ஆனது 2 மணி நேரம் தாமதமாகக் காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. இந்த தகவலைக் கன்னியாகுமரி விவேகானந்தர் கேந்திர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்