தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Bad Luck: மேஷத்தில் புகுந்த செவ்வாய்.. செலவுகளால் சிதைய போகும் ராசிகள்.. கண்ணீர் விடுவது உறுதி!

Bad Luck: மேஷத்தில் புகுந்த செவ்வாய்.. செலவுகளால் சிதைய போகும் ராசிகள்.. கண்ணீர் விடுவது உறுதி!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 28, 2024 01:58 PM IST

Lord Mars: ஒரு ஆண்டிற்கு பிறகு தனது பூர்வீக ராசியான மேஷ ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்துள்ள காரணத்தினால் சக்தி வாய்ந்த ருச்சக யோகம் உருவாகியுள்ளது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் பாதிப்பை சந்திக்க போகின்றனர்.

மேஷத்தில் புகுந்த செவ்வாய்.. செலவுகளால் சிதைய போகும் ராசிகள்.. கண்ணீர் விடுவது உறுதி!
மேஷத்தில் புகுந்த செவ்வாய்.. செலவுகளால் சிதைய போகும் ராசிகள்.. கண்ணீர் விடுவது உறுதி!

அந்த வகையில் செவ்வாய் பகவான் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். இது இவருடைய சொந்தமான ராசியாகும். ஒரு வருடத்திற்கு பிறகு செவ்வாய் பகவான் தனது சொந்தமான ராசிக்கான மேஷ ராசியின் நுழைந்துள்ளார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.

ஒரு ஆண்டிற்கு பிறகு தனது பூர்வீக ராசியான மேஷ ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்துள்ள காரணத்தினால் சக்தி வாய்ந்த ருச்சக யோகம் உருவாகியுள்ளது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் பாதிப்பை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையோடு உங்களுக்கு வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். உறவினர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும். வேலை மற்றும் தொழிலில் உங்களுக்கு மந்தமான சூழ்நிலை இருக்கும். வியாபாரத்தில் நிதி நிலைமையில் சறுக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் எட்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு கண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி நிலைமையில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்காது பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு வாக்குவாதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

சக ஊழியர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் அவ்வப்போது சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கணவன் மனைவி இடையே சண்டைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாழ்க்கை துணையால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மகர ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட போகின்றது. அசுப பலன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் தெரியாதவர்களிடம் பழகுவது நல்லது கிடையாது. பயணங்கள் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். உயர் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொண்டால் பணவரவு அதிகரிக்கும். நிதி நிலைமையில் பெரிய முன்னேற்றம் இருக்காது. குடும்பத்தில் சண்டைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாழ்க்கை துணையோடு உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படக்கூடும். எடுத்துக் கொண்ட காரியங்கள் முடிவதற்கு சட்ட தாமதமாகும். நீங்கள் மிகவும் பொறுமையாக இருந்தால் வெற்றி காணலாம்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9