Sani Bagawan: ’மேஷம் முதல் மீனம் வரை!’ பெட்ரோல் முதல் பொறியியல் வரை! சனி பகவான் தரும் தொழில்கள்!
ஒருவருக்கு நீண்ட ஆயுள் வேண்டும் எனில் அவரது ஜாதகத்தில் சனி பகவான் வலுவாக இருக்க வேண்டும். ஒருவரது ஜாதத்தில் 10ஆம் இடம் மற்றும் 2ஆம் இடத்துடன் தொடர்புகள் கிடைத்தால், சனி பகவான் தரும் தொழில்கள் மூலம் வெற்றிகள் கிடைக்கும்.

காலபுருஷனின் 10ஆம் வீட்டுக்கு அதிபதியான சனி பகவான், 7ஆம் வீடான துலாம் ராசியில் உச்சம் பெறுகின்றார். ஜோதிடத்தில் சனி பகவான் முதன்மையான தொழில் காரகனாக உள்ளார். கடும் உழைப்பாளிகளை உருவாக்கும் கிரகமாக சனி பகவான் உள்ளார். தன்னலம் கருதாமல் தொடர்ந்து உழைப்பது சனி பகவானின் காரகத்துவத்தில் ஒன்றாகும்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 28, 2025 12:36 PMராகு கேது பலன்கள்: ராகு கேது பணக்கார யோகத்தை பெறப்போகின்ற ராசிகள் யார் தெரியுமா?.. உங்க ராசி இருக்கா?
Mar 28, 2025 07:00 AMBad Luck Rasis: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.. அஸ்தமனத்தில் சிக்கிய ராசி.. சனி உச்சம்!
Mar 28, 2025 06:35 AMஇரட்டை ராஜ யோகம்.. மீன ராசியில் சூரியன்.. அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் மூன்று ராசிகள்.. நல்ல லாபம் கிட்டும்!
Mar 28, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : சவால்களை தைரியமா எதிர் கொள்ளுங்கள்.. வெற்றி தேடி வரும்.. இன்று உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Mar 27, 2025 05:16 PMGuru: 2025-ல் பணத்தை அள்ளிக் கொடுக்க வருகிறார் குரு.. இந்த ராசிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க போகுதா?
Mar 27, 2025 05:09 PMகிரகண யோகம்: 2027 வரை சனி விடமாட்டார்.. இந்த ஆண்டு முதல் யோகம் பெறுகின்ற ராசிகள்.. யார் அந்த ராசி?
மந்த குணம் கொண்ட சனி பகவான்
ஒருவரது ஜாதகத்தில் இயற்கை சுபர்களின் தொடர்புகளை சனி பகவான் பெற்றால், எப்போதும் உழைப்பின் மேன்மையை உணர்த்துவார். மந்த குணம் கொண்ட சனி பகவான், இடைவிடாத உழைப்புக்கு சொந்தக்காரர் ஆவார். மெதுவாக செய்யக்கூடிய தொழில்கள் சனி பகவானின் ஆதிக்கம் பெற்றது ஆகும். மனிதர்களின் ஆயுளை தீர்மானிக்க கூடிய கிரகமாக சனி பகவான் உள்ளார்.
சனி பகவானின் தொழில் பார்வை
ஒருவருக்கு நீண்ட ஆயுள் வேண்டும் எனில் அவரது ஜாதகத்தில் சனி பகவான் வலுவாக இருக்க வேண்டும். ஒருவரது ஜாதத்தில் 10ஆம் இடம் மற்றும் 2ஆம் இடத்துடன் தொடர்புகள் கிடைத்தால், சனி பகவான் தரும் தொழில்கள் மூலம் வெற்றிகள் கிடைக்கும்.
4ஆம் இடத்தில் இருந்தபடி 10ஆம் இடத்தை பார்த்தாலும், 8ஆம் வீட்டில் இருந்தபடி, 10ஆம் இடத்தை பார்த்தாலும், லக்னத்தில் இருந்தபடி 10ஆம் பார்வையால் 10ஆம் இடத்தை பார்த்தாலும் நன்மைகள் கிடைக்கும்.
12ஆம் இடத்தில் சனி இருந்தால், 2ஆம் இடத்தையும், 5ஆம் இடத்தில் சனி இருந்தால், 2ஆம் இடத்தையும் பார்த்தால் வரும் தொழில்கள் வெற்றியை தேடித் தரும்.
கிரகங்கள் உடன் சனி பகவான் சேர்ந்து ஏற்படுத்தும் தொழில்கள்
சூரியன் உடன் சனி பகவான் சேர்ந்து இருந்தால், அரசாங்கத்தில் கிழ் நிலை வேலைகளை அடையலாம். அரசியலில் உள்ளாட்சி அமைப்புகள் சார்ந்த பதவிகளை பெற முடியும். அரசியலில் ஒருவர் மக்கள் அபிமானத்தை பெறுவதற்கு சனி ஜாதகத்தில் வலுப்பெற்று இருப்பது அவசியம் ஆகும்.
சந்திரன் உடன் சனி பகவான் இணைந்தால், விவசாய விளை பொருட்கள் சார்ந்த தொழில்கள் உண்டாகும். எண்ணெய் வித்துக்கள், எள், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை விற்பனை செய்பவராக ஜாதகர் இருப்பார்.
இரும்பு, பழைய பொருட்கள், பூமிக்கு அடியில் கிடைக்கும் பொருட்கள், கனிம வளங்கள், பெட்ரோல், ஆயில், மதுபானம், அழுகும் பொருட்கள் ஆகியவையும் சனி பகவானின் காரகத்துவம் பெற்றவை. ராகு, கேது உடன் தொடர்பில் சனி இருந்தால் இது போன்ற தொழில்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
செவ்வாய் சனி சேர்ந்தால், பொறியியல் துறை சார்ந்த தொழில்களில் வெற்றிகளை குவிக்க முடியும்.
குருவுடன் சனி பகவான் சேர்ந்தால், நிதி, நீதி சார்ந்த பதவிகளை வகிக்க முடியும்.
புதன் உடன் சனி பகவான் சேர்ந்தால் கலை, அறிவியல் சார்ந்த துறைகளில் வெற்றிகளை குவிக்க முடியும்.
சுக்கிரன் உடன் சனி பகவான் சேர்ந்தால், ஆடை வடிவமைப்பு, கனரக வாகனங்கள், ட்ராவல்ஸ், ஹோட்டல்ஸ், உணவு பொருட்கள் தயாரிப்பு சார்ந்த தொழில்களில் வெற்றிகளை குறிவிக்க முடியும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-
Google News: https://bit.ly/3onGqm9
இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
