Bhaskara Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ சூரியனாக வாழ வைக்கும் பாஸ்கர யோகம் யாருக்கு?-bhaskara yogam unlocking astrological potential with bhaskara yogam - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Bhaskara Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ சூரியனாக வாழ வைக்கும் பாஸ்கர யோகம் யாருக்கு?

Bhaskara Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ சூரியனாக வாழ வைக்கும் பாஸ்கர யோகம் யாருக்கு?

Kathiravan V HT Tamil
Jan 22, 2024 06:19 PM IST

”Bhaskara Yogam: பாஸ்கர யோகம் அமையப்பெற்றவர்கள் மிகுந்த தைரியசாலிகளாக விளங்குவர்”

பாஸ்கர யோகம்
பாஸ்கர யோகம்

நவகிரகங்களின் தலைவனாக உள்ள சூரிய பகவானால் வசியோகம், மருத யோகம், ரவிச்சந்திர யோகம், பாஸ்கர யோகம் உள்ளிட்ட யோகங்கள்  உண்டாவதாக ஜோதிட சாஸ்திர நூல்கள் விவரிக்கிறது.  

இதன்படி ஒருவரது ஜாதகத்தில் சூரிய பகாவன் உள்ள இடத்திற்கு இரண்டாம் இடத்தில் சந்திர பவான் இருந்தால் அது பாஸ்கர யோகத்தை ஜாதகருக்கு ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

இதுமட்டுமின்றி ஒருவரது லக்னத்தில் சூரியனும், இரண்டாவது இடத்தில் புத பகவானும், 11ஆம் இடத்தில் சந்திர பவானும் இருந்தாலும் கூட அது பாஸ்கர யோகம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

மேலும் ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் ஆனவர் சந்திர பகவானுக்கு 4, 7, 10 ஆகிய இடங்களில் இருந்தாலும் பாஸ்கர யோகம் உண்டு என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

இத்தகைய பாஸ்கர யோகம் அமைய பெற்றவர்கள் தங்களது வாழ்கையில் மிகுந்த தைரியசாலிகளாக விளங்குவார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

இந்த யோகம் கொண்ட நபர்கள் சகல சாஸ்திரங்களை கற்று அறிவுசார் தளத்தில்  உச்சம் தொடும் வாய்ப்புகள் உண்டு. 

தலைமை பண்பை தரும் கிரகமான சூரியனால் வரும் பாஸ்கர யோகம் மூலம் இவர்களின் மேடைப்பேச்சு தனி அடையாளம் தரும் என்றும் இதனால் இவர்களது தலைமைத்துவம் மேம்படும் என்றும் ஜோதிடம் கூறுகிறது. பாஸ்கர் யோகம் அமைய பெற்றவர்கள் செய்யும் தொழில் எதிலும் வெற்றி பெறும் நிலையை கிரகங்கள் ஏற்படுத்தி உச்சம் தொட வைக்கும். 

Whats_app_banner