Astrology: ’கும்பத்தில் மூன்று கிரக சேர்க்கை!’ கெத்துக் காட்டப்போகும் மகர ராசி!
“ஏழரை சனி பாதிப்பில் உள்ள மகர ராசிக்காரர்கள், மனப்போராட்ட அமைப்பை சந்தித்து வரும் நிலையில், இந்த நேரத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு, சொத்து பிரச்னைகள் உள்ளிட்டவை முடிவுக்கு வரும்”
பிப்ரவரியில் கும்ப ராசியில் சூரியன், சனி, புதன் கிரக சேர்க்கை நடைபெறுகிறது. சூரியனோடு, புதன் இணைவதால் புதாதித்ய யோகம் ஏற்படுகிறது. புத்திக்கும், வித்தைக்கு அதிபதியாக புதன் பகவான் உள்ளார்.
மனித வாழ்கையில், எல்லா காரியத்துவத்திற்கும் காரணமானவராக புதன் உள்ளர். வித்தைகளை கற்றுக் கொண்டு தொழில் மூலம் வருவாய் ஈட்டுவதில் புதனின் பங்கு முக்கியமானது.
ஜாதகத்திலோ, கோச்சார ரீதிலோ புதன் சரியான நிலையில் இருந்தால் அதிக நன்மைகள் ஏற்படும். 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்பராசியில் சூரியன், புதன், சனி கிரகங்களின் சேர்க்கை ஏற்படுகிறது.
மகர ராசியை பொறுத்தவரை ராசிக்கு இரண்டாம் இடமான கும்பத்தில் சூரியன், புதன், சனி கிரகங்களின் சேர்க்கை ஏற்படுகிறது. மகரம் ராசிக்கு 8ஆம் இடமான சூரியன், 6,9 இட அதிபதியான புதன், ராசி அதிபதியான சூரியன் ஆகியோர் ஒன்றாக வாக்கு ஸ்தானம் எனப்படும் 2ஆம் வீட்டில் இணைகின்றனர். இது உற்சாகமான காலகட்டமாக மகர ராசிக்காரர்களுக்கு அமையும்.
ஏழரை சனி பாதிப்பில் உள்ள மகர ராசிக்காரர்கள், மனப்போராட்ட அமைப்பை சந்தித்து வரும் நிலையில், இந்த நேரத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு, சொத்து பிரச்னைகள் உள்ளிட்டவை முடிவுக்கு வரும்.
எதிர்பார்த்த உதவிகள் வீடு தேடி வரும், மனச்சோர்வு, உடல் சோர்வில் மகரம் ராசிக்கு கவனம் தேவை. குடும்பத்தை பொறுத்தவரை வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள், பலநாட்கள் முடியாமல் இருந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். வாழ்கையில் வெற்றி பெறுவதற்கான முன்னேற்ற பாதைகள் இந்த கிரக சேர்க்கை மூலம் தென்படும்.
டாபிக்ஸ்