Astrological Insights: ’மேஷம் முதல் மீனம் வரை!’ தொடர் வெற்றிகளை குவிக்கும் யோகம் யாருக்கு?
ஒரு ஜாதகத்தில் 9 மற்றும் 11ஆம் அதிபதிகள் வலுவாக இருந்தால் அவர்கள் தொடர் வெற்றியாளர்களாக இருப்பார்கள். இவர்கள் ஆட்சி, உச்சம், மூத்திரிகோணம், திக்பலம், வர்கோத்தமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அடைந்து இருந்தால் இவர்கள் பெரும் வெற்றியாளர்களாக இருப்பார்கள்.

ஜோதிடத்தில் ஒருவரது வெற்றியை கணிக்க உபஜெய ஸ்தான தொடர்பை கணிப்பது அவசியம். ஒருவர் பிறப்பினாலேயே நல்ல அதிர்ஷ்டங்களை அனுபவிப்பதற்கு 11ஆம் இடம் காரணம் ஆகிறது. ஒரு ஜாதகத்தில் 9 மற்றும் 11ஆம் அதிபதிகள் வலுவாக இருந்தால் அவர்கள் தொடர் வெற்றியாளர்களாக இருப்பார்கள். இவர்கள் ஆட்சி, உச்சம், மூத்திரிகோணம், திக்பலம், வர்கோத்தமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அடைந்து இருந்தால் இவர்கள் பெரும் வெற்றியாளர்களாக இருப்பார்கள்.
இது போன்ற போட்டோக்கள்
May 14, 2025 06:30 AMகுரு பெயர்ச்சி: கொட்டிக் கொடுக்க வருகிறார் குரு.. பண யோகத்தில் அமரும் ராசிகள்.. அதே ராசிகள் தான்!
May 14, 2025 05:00 AM‘நல்ல செய்திகள் தேடி வரும்.. செலவில் கவனம்’ இன்று மே. 14 நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா.. பாருங்க!
May 13, 2025 05:27 PMசனி கொட்டிக் கொடுக்க வருவார்.. பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்.. முன்னேற்றம் வருவது யாருக்கு?
May 13, 2025 02:08 PMகுரு பெயர்ச்சி.. நாளை முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் தொடங்கும்.. அதிர்ஷ்டம் அதிகம்.. பணவரவு!
May 13, 2025 06:29 AM'வெற்றியில் மிதக்கும் யோகம் உங்களுக்கா.. கவனமாக இருக்க வேண்டியது யார்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று சாதகமா!
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
பாக்கியாதிபதி வலுப்பெற்று இருந்தால் உறவுகள் மூலம் செழுமை அடைவீர்கள். உங்கள் வெற்றிக்கு உறவுகள் துணையாக இருப்பார்கள். எந்த பிரச்னைகள் வந்தாலும் உறவுகள் துணை நிற்பார்கள்.
12 லக்னங்களுக்கும் 9 மற்றும் 11ஆம் அதிபதிகள் எங்கே இருந்தால் சிறப்பு தெரியுமா?
மேஷம்
மேஷ லக்னத்துக்கு குருபகவான் 1, 4, 9, 12 ஆம் இடங்களில் இருப்பது சிறப்பு, 11ஆம் அதிபதியான சனி பகவான் 11, 10, 7ஆம் இடங்களில் இருப்பது சிறப்பு.
ரிஷபம்
ரிஷப லக்னத்தை பொறுத்தவரைக்கும் 11 ஆம் அதிபதியாக 8ஆம் இடத்திற்கு உரிய குரு பகவான் வருகிறார். 1, 3, 8, 11ஆம் இடத்தில் இருந்தால் சிறப்புகளை தரும். 9ஆம் அதிபதியான சனி பகவான் 9, 10, 6, 7ஆம் இடங்களில் இருக்கலாம்.
மிதுனம்
மிதுன லக்ன ஜாதகர்களுக்கு செவ்வாய் 11 ஆம் அதிபதியாவும் ஆறாம் அதிபதியாவும் வருகின்றனர். இவர் 10, 11, 6, 8 ஆம் இடங்களில் இருந்தால் சிறப்பை தரும். ஒன்பதாம் அதிபதியான சனி பகவான் 7, 9, 5, 8 ஆகிய இடங்களில் இருந்தால் சிறப்பு.
கடகம்
கடக லக்னத்திற்கு குரு லக்னத்திலேயே இருப்பது இரட்டை மடங்கு யோகத்தை தரும். மேலும் 6, 9ஆம் இடங்களில் இருப்பது சிறப்பு. 11ஆம் அதிபதியான சுக்கிரன் 11, 4 ஆகிய இடங்களில் இருப்பது ராஜயோகத்தை தரும்.
சிம்மம்
சிம்ம லக்னத்திற்கு புதன் 1, 11, 2 ஆம் இடத்தில் இருந்தால் வெகு சிறப்பான யோகத்தை தரும். 9ஆம் அதிபதியான செவ்வாய் 9, 10, 4 ஆம் இடங்களில் இருப்பது யோகத்தை தரும்.
கன்னி
கன்னி லக்னத்திற்கு 9ஆம் அதிபதியான சுக்கிரன் 2, 9, 7 ஆம் இடங்களில் இருப்பது சிறப்பு. 11 ஆம் அதிபதியான சந்திரன் வளர்பிறை சந்திரன் ஆக இருப்பது சிறப்பு. தனுசு மற்றும் ரிஷபத்தில் இருந்தால் நன்மைகளை தரும்.
துலாம்
துலாம் லக்னத்திற்கு சூரியன் 11 ஆம் அதிபதியாகவும், புதன் ஒன்பதாம் அதிபதியாவும் உள்ளனர். புதன் 1, 9, 12 ஆகிய இடங்களில் இருந்தால் சிறப்பு. சூரிய பகவான் 10, 11, 7 ஆம் இடங்களில் இருந்தால் சிறப்பு.
விருச்சிகம்
விருச்சிக லக்னத்தை பொறுத்தவரைக்கும் ஒன்பதாம் அதிபதி சந்திரன் திக்பலம் அடையலாம், கும்பம். ரிஷபம், கடகத்தில் இருந்தால் சிறப்பு. 11 ஆம் அதிபதியான புதன் 1, 11, 8 ஆம் இடங்களில் இருந்தால் சிறப்பு.
தனுசு
தனுசு லக்னத்தை பொறுத்தவரை சூரியன் 9, 10, 5ஆம் இடங்களில் இருப்பது சிறப்பு. சுக்கிரன் 11, 4, 6ஆம் இடங்களில் இருந்தால் சிறப்பு.
மகரம்
மகர லக்னத்தை பொறுத்தவரை 11ஆம் அதிபதியான செவ்வாய் 1, 11, 10, 4ஆம் இடங்களில் இருப்பது சிறப்பு. 9ஆம் இடத்திற்கு உரிய புதன் 1, 9, 6 ஆம் இடங்களில் இருப்பது சிறப்பை தரும்.
கும்பம்
கும்ப லக்னத்திற்கு 11ஆம் அதிபதியான குரு பகவான் 2, 11, 2, 6 ஆம் இடங்களில் இருப்பது சிறப்பு. 9ஆம் இடத்திற்கு உரிய சுக்கிரன் 9, 2, 4 ஆம் இடங்களில் இருப்பது சிறப்பு.
மீனம்
மீன லக்னத்தை பொறுத்தவரை 11 ஆம் அதிபதியான சனி பகவான் 11, 8, 12 ஆம் இடங்களில் இருந்தால் சிறப்பு. 9ஆம் அதிபதி செவ்வாய் பகவான் 2, 10, 11, 9ஆம் இடங்களில் இருப்பது சிறப்பை தரும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
