Ayodhya Ram Temple Entry Closed: அயோத்தி ராமர் கோயில் நுழைவு தற்காலிகமாக மூடல்.. காரணம் என்ன?-ayodhya ram mandir entry closed amid huge rush no darshan for devotees read more - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ayodhya Ram Temple Entry Closed: அயோத்தி ராமர் கோயில் நுழைவு தற்காலிகமாக மூடல்.. காரணம் என்ன?

Ayodhya Ram Temple Entry Closed: அயோத்தி ராமர் கோயில் நுழைவு தற்காலிகமாக மூடல்.. காரணம் என்ன?

Manigandan K T HT Tamil
Jan 23, 2024 12:18 PM IST

Ayodhya Ram Temple: அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அயோத்தி காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் சமீபத்திய முடிவு காரணமாக, அயோத்தி ராமர் கோயில் நுழைவு தற்காலிகமாக மூடப்பட்டது.

அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்த பக்தர்கள் (PTI Photo/Kamal Kishore)
அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்த பக்தர்கள் (PTI Photo/Kamal Kishore) (PTI)

பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முன்னணி அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் முன்னிலையில் ஜனவரி 22-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்ட ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டா விழாவிற்குப் பிறகு, அயோத்தி ராமர் கோயில் பொதுமக்களின் தரிசனத்திற்காக இன்று திறக்கப்பட்டது.

அயோத்தி ராமர் கோயில் நுழைவு மூடப்பட்டது ஏன்?

ஏற்கனவே கூறியது போல், அயோத்தி ராமர் கோயில் நுழைவு தற்காலிகமாக மூடப்பட்டது, ஏனெனில் பக்தர்கள் கூட்டம் அதிக எண்ணிக்கையில் வரிசையில் காத்திருந்தது. மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நிர்வாகமும், போலீசாரும் தற்காலிகமாக நுழைவாயிலை மூடிவிட்டு, கோயிலுக்குச் செல்லும் சாலைகளில் தடுப்புகளை போடப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலைகளில் தடுப்புகள் போடப்பட்டு, அவ்வழியாக வரும் வாகனங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக, பிரதமர் மோடி திங்களன்று அயோத்தி ராமர் கோயிலின் கருவறையில் ராம் லல்லாவின் பிராண பிரதிஷ்டாவை நிகழ்த்திய பின்னர், 51 அங்குல சிலையின் முதல் தோற்றம் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டது. பக்தர்களுக்கு பால ராமரை அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.

கர்நாடகாவைச் சேர்ந்த அருண் யோகிராஜ் ராம் லல்லாவை 5 வயது சிறுவனாக சித்தரித்து சிலையை வடிவமைத்துள்ளார். தெய்வீகத் தன்மையுடன் திகழும் பால ராமர் பிரான பிரதிஷ்டை விழா நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.

பால ராமரின் கையில் தங்க வில்லும் அம்பும் உள்ளன. நெற்றியில் தங்கத் திலகத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ராம் லல்லா மஞ்சள் நிற வேட்டி அணிந்திருந்தார், அதன் நிறம் பூக்களின் மஞ்சள் மற்றும் பளபளப்பான நகைகளின் மஞ்சள் கலந்தது. சிலை அலங்கரிக்கப்பட்ட கம்பீரமான நகைகளுக்கு மத்தியில் கூட மலர் அலங்காரம் தனித்து நின்றது.

ராமர் கோயில் என்று அழைக்கப்படும் ராம் ஜென்மபூமி மந்திர் பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் (கிழக்கு-மேற்கு) 380 அடி; அகலம் 250 அடி, உயரம் 161 அடி. இது மொத்தம் 392 தூண்களால் ஆதரிக்கப்படுகிறது மற்றும் 44 கதவுகளைக் கொண்டுள்ளது.

கோயிலின் தூண்கள் மற்றும் சுவர்கள் இந்து தெய்வங்கள், கடவுள்கள் மற்றும் தேவியர்களின் அழகான சிற்பங்களை வெளிப்படுத்துகின்றன. ராமர் கோயிலின் தரை தளத்தில் உள்ள பிரதான கருவறையில், ராம் லல்லாவின் சிலை வைக்கப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்