Lingeswarar: வந்துவிட்டது லிங்கேஸ்வரர் தேர்த் திருவிழா!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lingeswarar: வந்துவிட்டது லிங்கேஸ்வரர் தேர்த் திருவிழா!

Lingeswarar: வந்துவிட்டது லிங்கேஸ்வரர் தேர்த் திருவிழா!

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 19, 2023 11:39 PM IST

அவினாசியில் லிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா வரும் ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்குகிறது.

லிங்கேஸ்வரர்
லிங்கேஸ்வரர்

இந்த கோயில் காசிக்கு நிகராக போற்றப்படுகிறது. தமிழ்நாட்டில் பெரிய தேர் கொண்ட இடத்தில் மூன்றாவது பெரிய தேர் வைத்திருக்கும் இடத்தை இந்த கோயில் பிடித்துள்ளது. ஆண்டுதோறும் இந்த கோயிலில் சித்திரை மாதத்தில் தேர்த் திருவிழா நடத்தப்படுகிறது.

இந்த 2023 ஆம் ஆண்டுக்கான தேர்த் திருவிழா அடுத்த மாதம் ஏப்ரல் 25ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. ஏப்ரல் 26 ஆம் தேதி சூரிய சக்தி மண்டல காட்சிகளும், ஏப்ரல் 27ஆம் தேதி அதிகார நந்தி அன்ன வாகன காட்சிகளும், ஏப்ரல் 28ஆம் தேதி கைலாச வாகனம் காட்சிகளும், ஏப்ரல் 29ஆம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடுகளும் என அனைத்து வைபவங்களும் நடைபெற உள்ளன.

அதே ஏப்ரல் 29ஆம் தேதி 63 நாயன்மார்கள் காட்சியளித்தல் வைபவம் நடக்க உள்ளது. ஏப்ரல் 30ஆம் தேதியன்று கற்பக விருட்சம் திருக்கல்யாண வைபவம் நடக்க உள்ளது. மே ஒன்றாம் தேதி அன்று அதிர்வெட்டுகள் முழங்கப் பஞ்சமூர்த்திகள் திருத்தேர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மே இரண்டாம் தேதி அன்று காலை 10 மணி அளவில் தேர் வடம் பிடித்து இழுக்கப்படும். இழுக்கப்பட்ட தேரானது உன்னை எட்டாம் தேதி அன்று மஞ்சள் நீர் விழா உடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

இந்த கோயிலின் தேர்த்திருவிழா வேலைப்பாடுகள் கோயில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டி தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கோயிலின் தேர்த்திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள்.

இந்த ஆண்டும் அதேபோல் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்