தமிழ் செய்திகள்  /  Astrology  /  Astrological Insights: Which Zodiac Signs Are Indicated For Dual Marriages

Dual Marriages: ’இரு திருமணம் செய்யும் சூழல் யாருக்கு?’ ஜோதிடம் சொல்லும் உண்மை இதோ!

Kathiravan V HT Tamil
Feb 19, 2024 07:22 PM IST

”7ஆம் அதிபதி என்பவர் பகை, நீசம், அஸ்தமனம் போன்ற நிலையிலும், கடும் பாவிகளால் சூழப்பட்ட நிலையிலோ, அல்லது 9 மற்றும் 11ஆம் அதிபதி வலுக்கும் நிலையில் கட்டாயம் இரு திருமணம் நிகழும் வாய்ப்பு உண்டாகும்”

இரண்டு திருமணம் செய்யும் சூழல் யாருக்கு ஏற்படும்
இரண்டு திருமணம் செய்யும் சூழல் யாருக்கு ஏற்படும்

ட்ரெண்டிங் செய்திகள்

7ஆம் அதிபதி பலமாக இருக்கும் நிலையில், 9 மற்றும் 11ஆம் அதிபதிகள் வலுவாக இருந்தால் இரண்டு திருமணங்கள் நடப்பது இல்லை. 

7ஆம் அதிபதி என்பவர் பகை, நீசம், அஸ்தமனம் போன்ற நிலையிலும், கடும் பாவிகளால் சூழப்பட்ட நிலையிலோ, அல்லது 9 மற்றும் 11ஆம் அதிபதி வலுக்கும் நிலையில் கட்டாயம் இரு திருமணம் நிகழும் வாய்ப்பு உண்டாகும். 

ஒரு ஆணின் ஜாதகத்தில் இரு திருமணம் செய்வதற்கான வாய்ப்புகள் இருந்தால் 31 வயதிற்கு மேல் திருமணத்தை திட்டமிட்டால் இந்த தோஷங்களின் தாக்கம் 75 சதவீதம் வரை குறையும். பெண் திருமணத்தில் இது போன்ற இரு திருமண வாய்ப்புகள் இருந்தால், 27 முதல் 29 வயதிற்கு மேல் திருமணத்தை திட்டமிட்டால் தோஷங்களின் தாக்கம் குறையும். 

ஒரு ஆணின் ஜாதகத்தில் இரண்டு தாரம் வரும் வாய்ப்புகள் இருந்தால், ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக உள்ள பெண்ணை திருமணம் செய்தால், இரு திருமணம் செய்வதற்கான வாய்ப்புகள் குறையும். 

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் இரு தார வாய்ப்புகள் இருந்தால், ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக உள்ள ஆணை திருமணம் செய்தால் இரண்டு திருமண வாய்ப்புகளை முறியடிக்கலாம். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்