Astrology Insights: ’மேஷம் முதல் மீனம் வரை!’ சூரியனுடன் சேர்ந்த சுபர்கள் செய்யும் மாஸ் சம்பவங்கள்!
ஒருவருக்கு லக்னாதிபதி நீசம் பெற்று, லக்ன வீட்டில் பாவக் கோள் இருந்தாலும் சூரியன் உடன் சுபர் சேர்ந்து இருந்தால் மிகப்பெரிய நன்மைகளை பெற்றுத் தருவதாக அமையும்.
சூரிய பகவான்
சூரியன் பகவான்தான் நம்முடைய லக்னத்திற்கு பொறுப்பாளர் ஆவார். ஆத்ம காரகன் என்று அழைக்கப்படும் சூரிய பகவானுக்கு சம்பாத்திய காரகன் என்ற பெயரும் உண்டு. ஒருவர் திறமையாக சம்பாதிக்கும் திறன் கொண்டு இருக்கிறாரா என்பதை சூரியனை கொண்டுதான் கணிக்க முடியும்.
ஜோதிடத்தில் சூரிய பகவானின் காரகத்துவம்
சூரிய பகவான் உடன் சுபக் கோள்கள் சேர்ந்து இருப்பது ஒருவருக்கு அதிகாரம் மிக்க அரசுப் பதவிகளை தரும் அமைப்பை உண்டாகும். ஜாதகரின் தகப்பன் வர்க்கத்தினால் முன்னேற்றம், அதிகாரம் உடையவர்களோடு தொடர்பில் இருப்பது, நல்ல மாமனார், சித்தப்பா, பெரியப்பா ஆகிய உறவுகள் சிறப்பாக இருப்பது, தோரணையுடன் செயல்படுவது உள்ளிட்ட அமைப்புகள் ஒருவரது ஜாதகத்தில் சூரிய பகவான் வலுவாக இருக்கும் போதுதான் உண்டாகும் என்பது ஜோதிட விதியாக உள்ளது.
லக்னம் பலம் இழந்தாலும் சூரியனால் நன்மை
ஒருவருக்கு லக்னாதிபதி நீசம் பெற்று, லக்ன வீட்டில் பாவக் கோள் இருந்தாலும் சூரியன் உடன் சுபர் சேர்ந்து இருந்தால் மிகப்பெரிய நன்மைகளை பெற்றுத் தருவதாக அமையும். லக்னமும், லக்னாதிபதியும் கெட்டுவிட்டாலும், சூரியனோடு சுபக்கோள்கள் இரண்டு தொடர்பு கொண்டிருந்தாலே ஜாதகன் சம்பாத்திய வலிமை உடையவனாக இருப்பான். புதனும் சுக்கிரனும் இயற்கை சுபர்கள் ஆனால் இவங்க சூரியனை விட்டு ரொம்ப தூரம் விலகி ஏழாம் இடத்தில் இருந்து பார்க்கும் நிலை வரவே வராது.
சூரியன் உடன் சேரும் கிரகங்களால் நன்மைகள்
சந்திரன் ஒரு இயற்கை சுபராக இருந்தாலும் சூரியன் உடன் சேர்ந்து இருந்தால் அமாவாசை சந்திரனாக போய்விடுவார். சூரியனோடு புதனுடைய தொடர்பு இருக்கும்போது புத ஆதித்ய யோகம் உண்டாகும்.
சூரியன் உடன் குரு பகவான் தொடர்பு கொள்ளும் போது சிவராஜ யோகம் உண்டாகும். இது அதிகாரப்பதவிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் மற்றும் அரசியல் உள்ளிட்ட துறைகளில் சாதிக்க வைக்கும்.
சுக்கிரன் உடன் சூரியன் இருக்கும் போது ஜாதகர் சுகபோகங்களை அனுபவிக்கும் தகுதி கொண்டவராக இருப்பார். கலைத்துறையில் உச்சம் பெறும் நபராக இவர்கள் இருப்பார்கள். பௌர்ணமி சந்திரன் சூரியன் உடன் இருக்கும் போது பௌர்ணமி யோகம் உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும். ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!