Astrological Benefits of Guru: ’துலாம் முதல் மீனம் வரை!’ 6, 8, 12 இல் குரு மறைவதால் ஏற்படும் நன்மை, தீமைகள்!
Astrological Benefits of Guru: ஜோதிடத்தில் 6, 8, 12ஆம் வீடுகள் மறைவு ஸ்தானங்கள் என்று அழைக்கப்படுகின்றது. இயற்கை சுபர் ஆன குரு பகவான் ஒரு மனிதனை ஒழுங்கு படுத்தும் தன்மை கொண்ட கிரகம் ஆகும். குரு பகவான் மறைவது ஜோதிடத்தில் அவ்வளவு சிறப்பை தராது.

இயற்கை சுபர் ஆன குரு பகவான் ஒரு மனிதனை ஒழுங்கு படுத்தும் தன்மை கொண்ட கிரகம் ஆகும். குரு பகவான் மறைவது ஜோதிடத்தில் அவ்வளவு சிறப்பை தராது. இயற்கை சுபர் ஆக உள்ள குரு பகவான் பெருந்தன்மை குணத்திற்கு சொந்தக்காரர். குரு பகவான் மறையும் போது இந்த குணத்தில் சில மாறுபாடுகள் ஏறுபடும். தனத்திற்கு காரகன் ஆன குரு பகவான், தாரளமாக செலவு செய்யும் தன்மை உடையவர் அல்ல. அதே போல் தீவிரமாக செயலாற்றும் தன்மையும் இவருக்கு குறைவாக இருக்கும். குரு பகவான் மறையும் போது ஜாதகருக்கு கஞ்சத்தனம் இருக்கும். அதிக பொருள் தேடும் ஆசை இருக்கும். இதற்காக ஜாதகர்கள் குறுக்கு வழியை தேடுவர்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 19, 2025 01:34 PMஒரே நாளில் சனிப்பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணம்.. இந்த 3 ராசிக்கு பாதிப்பு.. உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துங்கள்!
Mar 19, 2025 11:37 AMஅதிர்ஷ்ட ராசிகள் : நான்கு கிரகங்களின் சேர்க்கை.. மூன்று ராசிக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகுது.. அந்தஸ்து, கௌரவம் உயரும்!
Mar 19, 2025 10:04 AMபிசாசு யோகம்: தரித்திர யோகத்தில் மாட்டிக் கொண்ட ராசிகள்.. ராகு சனி உருவாக்கிய பிசாசு யோகம்.. எது உங்க ராசி?
Mar 19, 2025 09:25 AMகேது பெயர்ச்சி 2025 : சிம்ம ராசியில் பிரவேசிக்கும் கேது.. எந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட் .. பண மழை நனையும் யோகம் உங்களுக்கா
Mar 19, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : அதிர்ஷ்டத்தில் விளையாடும் யோகம் யாருக்கு.. அன்பு திளைத்திருக்குமா.. இன்று உங்க நாள் எப்படி இருக்கும்!
Mar 18, 2025 10:08 PMSani puthan luck: நண்பர்கள் மூலம் ஏமாற்றம்.. திருமண கசப்பு.. சனி புதன் சேர்க்கை பலன்கள் என்னென்ன தெரியுமா?
துலாம்
துலாம் லக்னத்திற்கு 6இல் குரு பகவான் மறைந்தால் எதிரி, நோய், கடன் தொல்லை, அரசு வேலை, போட்டி, பொறாமை அல்லாத நிலையை தரும். 12ஆம் இடத்தில் குரு பகவான் இருப்பது ஓரளவு நன்மை பயக்கும்.
விருச்சிகம்
விருச்சிகம் லக்னத்தை பொறுத்தவரை குரு பகவான் மறையவே கூடாது. குடும்ப உறவுகளில் சிக்கல், வட்டிக்கட்டி வறுமையை அடைவது போன்ற நிலை ஏற்படலாம். குடும்பம் அமைவதில் சிக்கல்கள் ஏற்படும்.
தனுசு
தனுசு லக்னத்திற்கு 6ஆம் இடம் ஆன ரிஷபத்தில் குரு இருப்பது சிறப்பு அல்ல. 8ஆம் இடத்தில் குரு உச்சம் பெற்று விடுவதால் தூரதேச பயணம், திடீர் அதிர்ஷம், காப்பீடு துறையில் வேலை, அரசு உயர் அதிகாரி பொறுப்பு, பங்குச்சந்தையில் லாபம் உள்ளிட்டவை உண்டாகும். 12ஆம் வீட்டில் குரு மறைவது தைரியத்தை குறைக்கும்.
மகரம்
மகரம் லக்னத்திற்கு 6ஆம் இடமான மிதுனம் வீட்டில் உள்ளார். வெளிநாட்டில் வசிக்கும் வாய்ப்பு, விரையம் ஏற்படுதல், புதிய சூழலில் வசிக்கும் சூழல் உண்டாகும். 8ஆம் இடமான சிம்மத்தில் இருந்தால் சிறப்புதரும். நல்லவேலை, குடும்பம் ஆகியவை அமையும். 12ஆம் வீட்டில் குரு ஆட்சி பெறுவதால் அது மறைவு ஆகாது. இதனால் பெரிய மனித தோரணை, நல்ல விரைய செலவுகள், சமுதாயத்தில் அந்தஸ்து பெறுதல், மறைமுக சொத்துக்கள், பணம் சேர்பதில் ஆர்வம் ஆகியவை உண்டாகும்.
கும்பம்
கும்பம் லக்னத்திற்கு 6ஆம் இடமான கடகம் ராசியில் உச்சம் பெறுவதால் மறைவு நிலை ஏற்படாது. ஆனாலும் எதிரிகளால் பிரச்னை உண்டாகும். 8ஆம் இடத்தில் வலிமை இழப்பதால் பார்வையினால் ஓரளவு சுபம் பெற்றாலும் ஏற்ற இறக்கம் இருக்கும். 12ஆம் இடமான மகரம் ராசியில் நீசம் அடைவது நன்மைகளை தராது.
மீனம்
மீனம் லக்னத்திற்கு 6ஆம் இடமான சிம்மத்தில் மறைவது பெரும் கெடு பலன்களை தருவது இல்லை. ஆனால் ஜாதகர் தன்னம்பிக்கை மற்றும் முயற்சி குன்றி இருப்பார். 12ஆம் இடமான கும்பத்தில் குரு மறைவதும் அவ்வளவு சிறப்பை தராது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
