மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே இன்று (நவ.07) உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..ராசிபலன்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே இன்று (நவ.07) உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..ராசிபலன்கள்!

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே இன்று (நவ.07) உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..ராசிபலன்கள்!

Karthikeyan S HT Tamil
Nov 07, 2024 06:31 AM IST

மேஷம் ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு நாளை (நவம்பர் 07) வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே இன்று (நவ.07) உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..ராசிபலன்கள்!
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே இன்று (நவ.07) உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..ராசிபலன்கள்!

மேஷம்

பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். துணிவு வேண்டிய நாள்.

ரிஷபம்

புதிய துறை சார்ந்த தேடல்களும், கற்பதிலும் ஈடுபாடு உண்டாகும். வெளி வட்டாரத்தில் மதிப்பு மேம்படும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். இறை வழிபாட்டிற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். நேர்மறை சிந்தனைகளுடன் எதிலும் செயல்படுவீர்கள். வேகத்தை விட விவேகத்துடன் செயல்படவும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். செலவு நிறைந்த நாள்.

மிதுனம்

சூழ்நிலைகளை அறிந்து அதற்கேற்ப செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பாகப் பிரிவினை செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். வித்தியாசமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாகும். பழமையான சில விஷயங்களால் அமைதியின்மை உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.

கடகம்

புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். விருப்பமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். சமூக நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். லாபம் நிறைந்த நாள்.

சிம்மம்

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் திரும்பக் கிடைக்கும். உடனிருப்பவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். கடன் தொடர்பான சில பிரச்சனைகள் குறையும். பயணங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் முக்கியத்துவம் அதிகரிக்கும். அனுபவமிக்க வேலையாட்களை நியமிப்பீர்கள். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். செயல்களில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். யோகம் நிறைந்த நாள்.

கன்னி

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பது அவசியம். கலை சார்ந்த செயல்களில் ஆர்வம் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் முக்கியத்துவம் கிடைக்கும். செலவுகளை குறைத்து சேமிப்பீர்கள். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். உங்களை சுற்றியிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். உத்தியோகம் நிமித்தமான அலைச்சல் ஏற்படும். துன்பம் மறையும் நாள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்