Aja Ekadashi 2024: நாளை அஜா ஏகாதசி.. தீராத பாவங்கள் தீரும்..மகிமைகள் மற்றும் விரத முறைகள் பற்றி தெரியுமா?
Aja Ekadashi 2024: ஜென்மாஷ்டமிக்குப் பிறகு வரும் ஏகாதசி “அஜா ஏகாதசி” என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு அஜா ஏகாதசி ஆகஸ்ட் 29 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நீங்களும் விரதம் இருக்கிறீர்கள் என்றால், விரதத்தின் மகிமைகள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
Aja Ekadashi 2024: விஷ்ணு பகவான் ஏகாதசி பண்டிகையை மிகவும் விரும்புகிறார் என்று கூறப்படுகிறது. ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு ஏகாதசியும் தனித்துவம் வாய்ந்தது. பொதுவாக ஏகாதசி விரதம் என்பது பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தது என்றும் பகவான் விஷ்ணுவின் பரிபூரண அருளைப் பெற்றுத்தருவது என்றும் நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஏகாதசியும் தனித்துவமான பலன்களையும் நமக்கு அருள வல்லது.
அந்த வகையில் ஜென்மாஷ்டமிக்குப் பிறகு வரும் ஏகாதசி "அஜா ஏகாதசி" என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு அஜா ஏகாதசி (நாளை)ஆகஸ்ட் 29 ஆம் தேதி பாத்ரபத மாதத்தில் கொண்டாடப்படுகிறது. உதய திதியை முன்னிட்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஏகாதசி கொண்டாடப்படும், அதன் பரணம் மறுநாள் செய்யப்படும். இந்நாளில் விரதம் கடைப்பிடிப்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த விரத முறைகளை பற்றி தெரிந்துகொள்வோம்.
அஜா ஏகாதசி விரதத்தின் முக்கியத்துவம்
இந்து மதத்தில் அஜா ஏகாதசிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இந்த விரதம் விஷ்ணு பகவானை மகிழ்விக்க ஒரு அற்புதமான வாய்ப்பாக கருதப்படுகிறது. இந்த நாளில் வழிபாடு மற்றும் விரதம் இருப்பதன் மூலம், பக்தர்கள் முன் செய்த பாவங்களிலிருந்து விடுபட்டு மோட்சம் அடைவார்கள் என்று நம்பப்படுகிறது.
புராணங்களின்படி, ஏகாதசியின் முக்கியத்துவத்தை பகவான் கிருஷ்ணரே தர்மராஜ யுதிஷ்டிரரிடம் கூறினார். இந்த விரதத்தின் முக்கியத்துவத்தை விளக்கிய அவர், பொதுவாக விரத முறைகள் வழிபாடுகள் அனைத்தையும் கடைப்பிடிக்க வாய்ப்பில்லாதவர்கள் அஜா ஏகாதசி அன்று விரதம் இருந்தாலே அஸ்வமேத யாகம் செய்வது போன்ற புண்ணியத்திற்கு தகுதியானவர் என்று கூறியுள்ளார்.
அனைத்தையும் இழந்த அரிச்சந்திரன்
சத்யுகத்தில் சூர்யவம்சி சக்கரவர்த்தி மன்னன் அரிச்சந்திரன் இருந்தான். அவன் மிகவும் உண்மையானவன், வார்த்தைகளுக்கு பெயர் பெற்றவன். புராணத்தின் படி, ஒரு முறை அவர் தனது வாக்குறுதியை அளித்து, அந்த வாக்குறுதிக்காக தனது ராஜ்யம் முழுவதையும் ராஜரிஷி விஸ்வாமித்திரருக்கு தானமாக வழங்கினார். தட்சிணை கொடுப்பதற்காக தன் மனைவியையும் மகனையும் விற்றது மட்டுமின்றி, தன்னையும் ஒரு சண்டாளனுக்கு அடிமையாக விற்றார். அவர் பல துன்பங்களைத் தாங்கினார். ஆனால் அவர் சத்தியத்திலிருந்து விலகவில்லை.
கெளதம ரிஷியிடம் பரிகாரம் கேட்ட அரிச்சந்திரன்
அரிச்சந்திரன் ஒரு நாள் கௌதம முனிவரைச் சந்தித்தார். அப்போது அவரது பாதங்களைப் பணிந்த தன் வாழ்க்கையில் நடந்த துயரங்களை எடுத்துக் கூறினான். பின்னர் கௌதம ரிஷியிடம் பரிகாரத்தைக் கேட்டார், அவர் அஜா ஏகாதசியின் மகிமையை விவரிக்கும் போது இந்த விரதத்தை கடைப்பிடிக்கச் சொன்னார். அரிச்சந்திரன் தன் சக்திக்கேற்ப இந்த விரதத்தை கடைபிடித்ததன் மூலம் அவர் இழந்த இராஜ்யத்தைப் பெற்றது மட்டுமல்லாமல், குடும்பம் உட்பட அனைத்து வகையான இன்பங்களையும் அனுபவித்தார். இறுதியில் அவர் பகவானின் உன்னத இருப்பிடத்தை அடைந்தார்.
அஜா ஏகாதசி எப்போது?
இத்தகைய சிறப்புகளையுடைய அஜா ஏகாதசி நாளை (29.8.2024) வருகிறது. எனவே தவறாமல் இந்த நாளில் விரதம் இருந்து ஹரியை வழிபட்டால் இப்பிறப்பில் நாம் படும் துன்பங்கள் நீங்கி நலமுடன் வாழலாம் என்பது நம்பிக்கை.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்