தமிழ் செய்திகள்  /  Astrology  /  After 43 Years Pisceans Get The Jackpot Horoscope Astrology

Meenam Rasi luck: 43 ஆண்டுகளுக்கு பிறகு மீனராசிக்காரர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்; சனி கொடுக்கப்போகும் பெரும்பலம் என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Jan 15, 2024 01:56 PM IST

ரேவதி நட்சத்திரத்தில் பிறக்கக்கூடியவர்களுக்கு, வாழ்க்கை துணை இம்சையாக அமையும். இவர்கள் சொல்லும் எதையுமே அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

மீனராசி பலன்கள்!
மீனராசி பலன்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

பூராட்டாதி, உத்திராட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு மீன ராசி பொருந்தும். பூராட்டதி 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை அவ்வளவு சுலபமாக அமைந்து விடுவதில்லை. கடுமையான போராட்டங்களை அவர்கள் சந்திப்பார்கள். உத்திராட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஓரளவிற்கு பலன்கள் கிடைக்கும். 

ரேவதி நட்சத்திரத்தில் பிறக்கக்கூடியவர்களுக்கு, வாழ்க்கை துணை இம்சையாக அமையும். இவர்கள் சொல்லும் எதையுமே அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். 

சனிபகவானின் உத்திராட்டதி சாரத்தில் பிறக்கும் மீனராசிக்காரர்களுக்கு 43 ஆண்டுகளுக்கு பிறகு சுக்கிர திசை நடக்கும். அப்போது அவர்களுக்கு வாழ்க்கையில் விடிவு காலம் பிறக்கிறது. 

சினிமா துறையில் இருப்பவர்கள் என்றால், சுக்கிரன் ஓரளவிற்கு சுபத்துவம் பெற்று இருக்கும் பட்சத்தில், உங்கள் வாழ்க்கை விண்ணைத் தொடப்போவது என்பது உறுதி!

கடந்த ஒரு வருடமாக நடந்து வரும் ஏழரை சனியானது, இப்போது எதிரிகளை துவம்சம் செய்யும் காலகட்டமாக மாறி உங்களுக்கு பலன்களை தரப்போகிறது!

விருச்சிக ராசிக்காரர்களுக்கான பலன்கள்!

விசாகம், அனுஷம்,கேட்டை ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கு விருச்சிக ராசியானது பொருந்தும். இவர்களுக்கு 42 ஆண்டுகளுக்குப் பிறகு வரக்கூடிய பொற்காலமானது வந்திருக்கிறது.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கொஞ்சம் நெகட்டிவான திங்கிங் கொண்டு இருப்பார்கள்.ஆனால் அதெல்லாம் இந்த சமயத்தில் பலிக்காது. நீங்கள் உச்சகட்ட வெற்றியை அடையப் போகிறீர்கள்.

குரு திசையில் பிறந்தவர்களுக்கு ஞானம், கல்வி உள்ளிட்டவை இருக்கும். ஆனால் நீங்கள் சனி திசைக்குக்குள் செல்லும் போது தடுமாற்றங்கள் ஏற்படும். தேவையில்லாத காதல் வரும். அந்த காதலில் மூழ்கும் நீங்கள் படிப்பை தொலைத்து விடுவீர்கள். படிப்பு போகும் போது வாழ்க்கையே தடம் மாறிவிடும்

நெருங்கிய உறவுகள், நெருங்கிய உறவினர்கள் உங்களை விட்டு செல்லும்படியான சூழ்நிலையை இந்த சனி திசை கொடுத்திருக்கும். அதற்குள் நீங்கள் 25 வயதை கடந்து இருப்பீர்கள்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்றால் உங்களுக்கு 40 வயதிற்கு பிறகு ராகு திசை முடிந்து, சுக்கிர திசையானது வரும். இந்த சுக்கிர திசையானது மீடியா, கல்வி சார்ந்த தொழில்கள், கலை சார்ந்த தொழில்கள், பத்திரிக்கையில் வேலை பார்ப்பவர்கள் ஆகியோருக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு திருப்பங்களை தரும். இன்னும் ஒரு படி மேலே போய் சொல்ல வேண்டும் என்றால், 42 ஆண்டுகளுக்குப் பிறகு வரப்போகும் இந்த திசை உங்களை விஸ்வரூபம் எடுக்க வைக்கும்.

இதை மெருகேற்றுவதற்கு நீங்கள் விநாயகப் பெருமானை வணங்கி, பஞ்ச லட்சண ஸ்லோகத்தை சொல்லி,உங்களால் இயன்ற பணிவிடைகளை பெருமானுக்கு செய்யுங்கள்.

சந்திரன் உங்கள் ராசியில் நீச்சம் பெறுவதனால், நீங்கள் விநாயகர் பெருமானை வணங்கும் பொழுது, அவர் அதனை வலுப்படுத்துவார். சந்திரன் என்பது மனதை குறிக்கும். மனம் வலுப்படும் போது எல்லாமே மாறும்.

நன்றி: ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன்!

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்