Rahu Ketu: ’உச்சத்தில் ஏற்றி இறக்கிவிடும் 8ஆம் இடம்!’ ராகு, கேது இருந்தால் என்ன ஆகும்! முழு பலன்கள் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Ketu: ’உச்சத்தில் ஏற்றி இறக்கிவிடும் 8ஆம் இடம்!’ ராகு, கேது இருந்தால் என்ன ஆகும்! முழு பலன்கள் இதோ!

Rahu Ketu: ’உச்சத்தில் ஏற்றி இறக்கிவிடும் 8ஆம் இடம்!’ ராகு, கேது இருந்தால் என்ன ஆகும்! முழு பலன்கள் இதோ!

Kathiravan V HT Tamil
Mar 11, 2024 04:47 PM IST

”Horoscope: சாதாரண நிலையில் இருக்கும் மனிதன் தொடங்கி சக்கரவர்த்தியாய் வாழ்பவர்கள் வரை யாரும் வாழ்கையில் அவமானங்களை விரும்பமாட்டார்கள். ஆனால் அந்த அவமானங்களை பெற்றுத் தரும் ஸ்தானமாக லக்னத்திற்கு 8ஆம் இடம் உள்ளது”

ராகு - கேது
ராகு - கேது

சாதாரண நிலையில் இருக்கும் மனிதன் தொடங்கி சக்கரவர்த்தியாய் வாழ்பவர்கள் வரை யாரும் வாழ்கையில் அவமானங்களை விரும்பமாட்டார்கள். ஆனால் அந்த அவமானங்களை பெற்றுத் தரும் ஸ்தானமாக லக்னத்திற்கு 8ஆம் இடம் உள்ளது. 

உயரத்தில் இருந்து கீழே விழும் நிகழ்வு என்பது 8ஆம் இடத்தில் பொருந்தி வருகிறது. எண் கணிதத்தில் 8ஆம் இடத்தின் அதிபதியாக சனிபகவான் உள்ளார். நமது வாழ்கையில் திடீரென்று சந்திக்கும் மனிதர்கள், திடீரென எதிர்கொள்ளும் விபத்துகள், திடீரென எதிர்கொள்ளும் சம்பவங்களை குறிப்பிடும் இடமாக 8ஆம் இடம் உள்ளது. 

இந்த 8ஆம் இடத்தில் ராகு, கேது கிரகங்கள் உள்ளது அச்சப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. எப்போதுமே ராகுவுக்கு நேர் 7ஆம் இடத்தில் இருக்க கூடிய கிரகமாக கேது பகவான் உள்ளார். இதனால் ராகு பகவான் 8 ஆம் இடத்தில் இருந்தால், குடும்ப ஸ்தானமான 2ஆம் இடத்தில் கேது இருப்பார்.  இந்த கிரக அமைவு நல்ல விஷயங்களாக கருதப்படுவது இல்லை. 

களத்திர தோஷம், சர்ப தோஷம், நாக தோஷம் என்பதை கூட 2 மற்றும் 8 ஆம் இடங்களில் ராகு, கேது கிரகங்கள் இருப்பதால்தான் ஏற்படுகிறது. இவர்கள் 8ஆம் இடத்தில் இருக்கும்போது இவர்கள் தசைகள் வராமல் இருந்தால் ஜாதகருக்கு சிறப்பை தரும். 

ஒரு வேளை 8ஆம் இடத்தில் இருக்கும் ராகு மற்றும் கேது தசையானது நமது மிக இளம் வயதில் வந்தால் கெடுபலன்கள் இருந்தலும், அவை குறைவாக இருக்கும். 

ராகு மற்றும் கேது பகவானை பொறுத்தவரை அமர்ந்த வீடு இயற்கை சுபரின் வீடாக இருந்தால் பிரச்னைகள் குறைவாக இருக்கும். 

உதாரணமாக ரிஷப லக்ன ஜாதகர் ஒருவருக்கு 8ஆம் இடத்தில் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், அதாவது தனுசு ராசியில் ராகு, கேது இருந்தால் அது குருவின் வீடு என்பதால் அவர்களுக்கான பிரச்னைகள் 50 சதவீதம் வரை குறைவாக இருக்கும். 

இதே ஜாதகத்தில் குரு பகவான் அங்கேயே ஆட்சி பெற்ற நிலையிலோ அல்லது மீனத்தில் ஆட்சி பெற்ற நிலையிலோ அல்லது கடகத்தில் உச்சம் பெற்ற நிலையில் இருந்தால் இன்னும் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்பு அதிகம். 

8ஆம் இடத்தின் வாயிலாக உழைக்காமல் கிடைக்கும் பணம், திடீர் அதிர்ஷ்டம், தனவரவு, வெளிநாட்டு வாழ்கை, உயில் மூலம் கிடைக்கும் சொத்துக்கள் ஆகிய பலன்கள் கிடைக்கும். 

சுபர் வீட்டில் ராகு, கேது அமராமல் பாவ கிரகத்தின் வீட்டில் அமர்திருக்கிறார்கள் என்றால் அதற்கும் விதி விலக்குகள் உள்ளது. 

உதாரணமாக கடக லக்ன ஜாதகத்தில், லக்னத்திற்கு 8ஆம் இடமான கும்பத்தில் ராகு அல்லது கேது உள்ளனர் என்றால் இந்த வீட்டுக்கு அதிபதியான சனி பகவான் துலாம் ராசியில் உச்சம் பெற்றால், வீடு கொடுத்தவன் வலு என்ற தத்துவத்தின் அடிப்படையில் ராகு, கேது கிரகங்கள் தங்கள் தசா காலங்களில் கடக லக்ன ஜாதகருக்கு முன்னேற்றத்தை கொடுப்பார். ஆனால் கூடவே அசிங்கம், அவமானம், விபத்து உள்ளிட்ட தீமைகளையும் கொடுப்பார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்