Kan Thirusti: கண் திருஷ்டியை தவிடுபொடியாக்க சக்திவாய்ந்த எலுமிச்சை பரிகாரம்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kan Thirusti: கண் திருஷ்டியை தவிடுபொடியாக்க சக்திவாய்ந்த எலுமிச்சை பரிகாரம்

Kan Thirusti: கண் திருஷ்டியை தவிடுபொடியாக்க சக்திவாய்ந்த எலுமிச்சை பரிகாரம்

Manigandan K T HT Tamil
Aug 29, 2023 11:34 AM IST

கடுமையான கண் திருஷ்டியை பொடி பொடியாக்க இந்த வழிமுறைய பின்பற்றுங்கள்.

எலுமிச்சை பழம், கண் திருஷ்டி
எலுமிச்சை பழம், கண் திருஷ்டி

கடுமையான கண் திருஷ்டியை பொடி பொடியாக்க இந்த வழிமுறைய பின்பற்றுங்கள்.

கெட்ட எண்ணங்களுடன் ஒருவர் நம்மை பார்த்துவிட்டாலே போதும். எதிர்மறை எண்ணங்கள் நம் உடலை சூழ்ந்துவிடும்.

அந்த எதிர்மறை ஆற்றல் நம்மிடம் வந்துவிட்டாலே நன்றாக இருக்கும் குடும்பத்தில் பூகம்பம் வெடிக்க தொடங்கும்.

வீட்டில் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்குக் கூட நோய்நொடி வரக் கூடும்.

காசு வீட்டில் தங்காது. மாத்திரை மருந்துக்கே பணம் செலவாகிக் கொண்டிருக்கும். பணம் குவியுதோ இல்லையோ செலவு மட்டும் ஆகிக் கொண்டே இருக்கும்.

நமது சாப்பாட்டு அறையில் இருக்கும் சாப்பாடு அப்படியே இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் நம்மதியாக சாப்பிடக் கூட முடியாது.

வீடு சுத்தம் செய்ய முடியாது. அப்படியே குப்பையுடன் இருக்கும். மேலும், அந்த வீட்டில் குழப்பங்களும் சண்டை சச்சரவுகளும் அடிக்கடி நடந்து கொண்டே இருக்கும்.

இதெல்லாம் கண் திருஷ்டி பட்டதற்கான அறிகுறிகள் ஆகும். இந்தப் பரிகாரத்தை வாரத்தில் ஒரு நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமையில் செய்யுங்கள்.

கண் திருஷ்டி இருக்கிறதோ இல்லையோ இந்த வழிகளை ஞாயிறு தோறும் செய்துவந்தால் நமது குடும்பத்தை கண் திருஷ்டி ஒன்றும் செய்யாது.

அமாவாசை தினத்திலும் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். அப்போது இரட்டிப்புப் பலன் கிடைக்கும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் சுண்ணாம்பு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் மஞ்சத் தூள் சேர்த்து தண்ணீர் சில துளிகள் விட்டு கலந்து கொள்ளுங்கள். அது சிவப்பு நிறமாக மாறிவிடும். அதனுடன் கல் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

கல் உப்பும் சிவப்பு நிறம் ஆகிவிடும். இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் எலுமிச்சை பழத்தை எடுத்து 4 பாகங்களாக வெட்டிக் கொள்ளுங்கள்.

எலுமிச்சையை அடி பாகத்தில் ஒட்டியிருக்குமாறு விட்டுவிட்டு வெட்டுங்கள். இப்போது நான்கு பாகங்களாக இருக்கும் எலுமிச்சையின் நடுவில் சிவப்பு நிறத்தில் இருக்கும் கல் உப்பை வைத்திடுங்கள். அந்த கல் உப்பின் மேல் கிராம்பை குத்தி வையுங்கள்.

வீட்டில் உள்ள பெரியோர் இந்த எலுமிச்சையை வைத்து வீட்டில் உள்ளவர்களை கிழக்கு பக்கமாக உட்கார்ந்து இருக்க சொல்லி சுற்றுப் போட வேண்டும். இடது பக்கமாக மூன்று முறையும், வலது பக்கமாக 3 முறையும் ஏற்ற இறக்கமாக 3 முறையும் சுற்றிவிட்டு தெரு முனையில் போட்டுவிட்டு வந்துடுங்க.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்