8th House Astrology: ’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்களுக்கு ஆயுள் எப்படி? 8ஆம் இடம் தரும் மரண பயம் உங்களுக்கு உண்டா?
உங்கள் ஜாதகத்தில் வலுவான ஒரு கோள் 8ஆம் இடத்தில் இருந்தாலே ஆயுள் குறித்த பயம் உண்டாகும். ஆயுள் குறித்த கவலை இருப்பவர்கள் திருக்கடையூருக்கு சென்று ஆயுள் ஹோமம் செய்து கொள்வது நன்மைகளை தரும்.
சிலருக்கு உயிர், ஆயுள், மரணம் மீது மிகுந்த பயம் இருக்கும். ஜோதிடத்தில் 8ஆம் இடம் ஆனது ஆயுளையும், ஆயுள் குறித்த கவலையையும் குறிக்கின்றது. உங்கள் ஜாதகத்தில் வலுவான ஒரு கோள் 8ஆம் இடத்தில் இருந்தாலே ஆயுள் குறித்த பயம் உண்டாகும். ஆனால் 8ஆம் இடத்தில் வலுப்பெற்ற கோள்கள் இருப்பது தீர்க்க ஆயுளை தரும். ஆயுள் குறித்த கவலை இருப்பவர்கள் திருக்கடையூருக்கு சென்று ஆயுள் ஹோமம் செய்து கொள்வது நன்மைகளை தரும்.
மேஷம்
மேஷ லக்னத்தை பொறுத்தவரை லக்னாதிபதியான செவ்வாய், கேது, குரு, சந்திரன் ஆகிய கிரகங்கள் 8ஆம் இடத்தில் இருந்தால் ஆயுள் பற்றிய குழப்பம் இருக்கும்.
ரிஷபம்
ரிஷப லக்ன ஜாதகர்களுக்கு 8ஆம் வீட்டின் அதிபதியான குரு இருந்தால் ஆயுள் பற்றிய பயம் மற்றும் குழப்பம் இருக்கும். சந்திரன், சுக்கிரன் ஆகிய கோள்கள் இருந்தாலும் இந்த நிலை தொடரும்.
மிதுனம்
மிதுன லக்ன ஜாதகர்களுக்கு 8ஆம் இடத்தில் செவ்வாய் வலுத்து உச்சம் பெற்றாலோ அல்லது சனி ஆட்சி பெற்றாலோ ஆயுள் பற்றிய பயம் அல்லது குழப்பம் இருக்கும். இதனால் நல்ல வாய்ப்புகளை தவற விடுவார்கள்.
கடகம்
கடக லக்ன ஜாதகர்களுக்கு இயற்கையாகவே ஆயுள் வலு அதிகம் உண்டு. இவர்களுக்கு 8ஆம் இடத்தில் வலுத்த கோள் சனி என்பதால் ஆயுளை வலுப்படுத்தும் வேலைகளை இயல்பாகவே செய்வார்கள். இவர்களுக்கு ஆயுள் பற்றிய பயம் கூடுதலாக ஆயுளை விருத்தி செய்யும்.
சிம்மம்
சிம்ம லக்ன ஜாதகர்களுக்கு 8ஆம் இடத்தில் குரு, சுக்கிரன் கிரகங்கள் இருந்தால் ஆயுள் பற்றிய சந்தேகமும் கவலையும் வந்து போகும். ஆனால் இவர்களுக்கு இந்த கிரகங்கள் பூரண ஆயுளை கொடுக்கும்.
கன்னி
கன்னி லக்ன ஜாதகர்களுக்கு சூரியனும் செவ்வாயும் எட்டாம் இடத்தில் வலுத்தால் ஆயுள் குறித்த சந்தேகங்கள் உண்டாகும். 8ஆம் இடத்தில் சூரியன் இருந்தால் ஆயுள் தீர்க்கமாக இருக்கும்.
துலாம்
துலாம் லக்ன ஜாதகர்களுக்கு 8ஆம் இடத்தில் சந்திரன், சுக்கிரன் இருந்தால் ஆயுள் சார்ந்த பயம் இருந்து கொண்டே இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக லக்ன ஜாதகர்களுக்கு 8ஆம் இடத்தில் புதன், குரு பகவான் இருக்கும் போது ஆயுள் குறித்த சந்தேகம் மற்றும் கவலைகள் அதிகம் உண்டாகும். அதிக விழிப்புணர்வு உடன் இவர்கள் செயல்படுவார்கள். எதிரிகளால் தாக்கப்படுவது, உணவு ஒவ்வாமை உண்டாவது, தவறான மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கை உடன் இருப்பது முக்கியம்.
தனுசு
தனுசு லக்னத்துக்கு லக்னாதிபதியான குரு பகவான் 8இல் வலுப்பது, சந்திரன் ஆட்சி பெறுவது உள்ளிட்டவை ஆயுள் குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தும்.
மகரம்
மகர லக்னத்துக்கு 8ஆம் இடத்தில் சூரியன் ஆட்சி பெற்று உடன் புதன் இருந்தால் ஆயுள் குறித்த கவலைகள் உண்டாகும். ஆனால் 8ஆம் இடத்தில் சூரியன் இருப்பது ஆயுள் தீர்க்கம் உண்டாகும்.
கும்பம்
கும்ப லக்ன ஜாதகர்களுக்கு புதன் உச்சம் பெற்று இருந்தால் ஆயுள் குறித்த கவலைகள் இருக்கும். ராகு அல்லது கேது கிரகங்கள் கன்னியில் இருந்தாலும் இந்த கவலைகள் உண்டாகும்.
மீனம்
மீன லக்னத்தில் பிறந்தவர்கள் தங்களின் ஆயுள் குறித்து அதிகம் கவலைபடுவது இல்லை. ஆனால் சனி எட்டாம் இடத்தில் உச்சமும், சுக்கிரன் ஆட்சியும் பெற்றால் விபத்து நடக்குமோ என்ற அச்சத்துடன் இருப்பார்கள். சூரியன் நீசம் அடைந்து இருந்தாலும் ஆயுள் குறித்த சந்தேகங்கள் இவர்களுக்கு இருக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.