Ayyappan Statue: மலை உச்சியில் ஐயப்பனுக்கு 133 அடி சிலை!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ayyappan Statue: மலை உச்சியில் ஐயப்பனுக்கு 133 அடி சிலை!

Ayyappan Statue: மலை உச்சியில் ஐயப்பனுக்கு 133 அடி சிலை!

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 16, 2023 03:57 PM IST

பத்தனம் திட்டா நகரில் உள்ள சுட்டிப்பாரா மலை உச்சியில் ஐயப்பனுக்கு 133 அடி உயரச் சிலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன்
சபரிமலை ஐயப்பன்

தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் 2022 ஆம் ஆண்டு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சென்றனர். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாகப் பார்க்கப்படும் சபரிமலை ஐயப்பனுக்குக் கேரள மாநிலம் பத்தனம் திட்டா நகரில் 133 அடி உயரச் சிலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம் திட்டா மாவட்டத்தில்தான் சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. பத்தனம் திட்டா நகரில் உள்ள சுட்டிப்பாரா மலை உச்சியில் மகாதேவர் கோயில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் 133 அடி உயர ஐயப்பன் சிலை 125 கோடியில் அமைக்க இந்தக் கோயில் டிரஸ்ட் முடிவு செய்துள்ளது.

இந்த சிலையானது கடல் மட்டத்திலிருந்து நான் ஒரு அடிக்கு மேல் கொண்ட குன்றின் மீது 66 மீட்டர் சுற்றளவு கொண்டதாக அமைக்கப்பட உள்ளது. இந்த சிலையை 35 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் இருந்து பார்த்தாலும் தெரியும் அளவிற்கு உருவாக்கப்பட உள்ளது. மேலும் ஐயப்பன் பிறந்த ஊராகக் கூறப்படும் பந்தளத்திலிருந்து பார்த்தாலும் தெரியும் அளவிற்கு உருவாக்கப்பட உள்ளது.

இந்த ஐயப்பன் சிலைக்கு உட்புறம் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட உள்ளது அந்த அருங்காட்சியகத்தில் ஐயப்பனின் வரலாறு நண்பர்கள், பந்தள அரண்மனை, பம்பா, அழுதா நதிகள் போன்றவை தத்துவமாக அமைக்கப்பட உள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்