தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mercury: புதன் கொட்டும் யோகம்.. பணத்தில் குளிக்கும் ராசிகள்.. ஜூன் முதல் ராஜ வாழ்க்கை ஆரம்பம்

Lord Mercury: புதன் கொட்டும் யோகம்.. பணத்தில் குளிக்கும் ராசிகள்.. ஜூன் முதல் ராஜ வாழ்க்கை ஆரம்பம்

Suriyakumar Jayabalan HT Tamil
May 21, 2024 10:47 AM IST

Lord Mercury: புதன் பகவானின் ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய வளர்ச்சியை காணப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

புதன் கொட்டும் யோகம்.. பணத்தில் குளிக்கும் ராசிகள்.. ஜூன் முதல் ராஜ வாழ்க்கை
புதன் கொட்டும் யோகம்.. பணத்தில் குளிக்கும் ராசிகள்.. ஜூன் முதல் ராஜ வாழ்க்கை

புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் ஒருவருடைய ராசியில் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு அணைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

மேஷ ராசியில் தற்போது புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் 31ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கிறார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும். புதன் பகவானின் ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய வளர்ச்சியை காணப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும். வசதி மற்றும் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

கும்ப ராசி

 

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். தொழில் மற்றும் சில முக்கியமான முடிவுகளில் உங்களுக்கு ஏற்ற சூழ்நிலை அமையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

மகர ராசி

 

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு குழந்தைகளால் நல்ல செய்தி தேடி வரும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து வருமானம் அதிகரிக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel