தினமும் கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Oct 08, 2024
Hindustan Times Tamil
பல்வேறு ஊட்டச்சத்துக்களின் கலவை கொண்டிருக்கும் கருப்பு கவுனி அரிசி சூப்பர் உணவாக கருதப்படுகிறது
கருப்பு கவுனி அரசியில் புரதம், இரும்பு, நார்ச்சத்து நிறைந்துள்ளது. அத்துடன் இதில் வைட்டமின் ஈ, பி, பீட்டா கரோடீன், அமினோ அமிலங்கள், ஆரோக்கிய கொழுப்புகள் உள்ளன
கருப்பு கவுனி அரிசியில் இருக்கும் புரதம், அமினோ அமிலங்கள் ஆகியவை உடல் திசுக்களை சேதமடையாமல் தக்க வைக்கிறது. இரும்புச்சத்து உடலில் ஆக்சிஜனை சீராக பயணிக்க உதவி புரிந்து ஆற்றலை மேம்படுத்த செய்கிறது
இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃப்ரீ ரேடிக்கல்கள் காரணமாக ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுதத்தை குறைக்கிறது. இதன் மூலம் அல்சைமர், சில வகையான புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது
இதய நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதில் கருப்பு கவுனியில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முக்கி பங்கு வகிக்கிறது
இதில் இருக்கும் வைட்டமின் ஈ, கரோடினாய்ட்கள் கண்கள் ஆரோக்கியத்துக்கு ஆதரவு அளிக்கிறது. வயது தொடர்பாக மாகுலர் சிதைவு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கிறது
கருப்பு கவுனி அரிசியில் இருக்கும் ஆந்தோ சயனின்ஸ், அமினோ அமிலங்கள் நினைவாற்றலை பெருக்குவதோடு, கவனம், கற்றல் திறனை அதிகரிக்க உதவுகிறது
புஷ்பா படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் இன்று சென்னையில் நடக்கிறது. அதற்காக படக்குழுவினர் சென்னைக்கு வந்திருக்கிறார்கள்.