நம்மை அடக்கும்போது நாம் செய்ய வேண்டியவை?

By Marimuthu M
Sep 10, 2024

Hindustan Times
Tamil

பணியிடத்தில் நம்மை வேண்டுமென்றே சிக்கல்களில் சிக்கவைத்து, நான்குபேர் முன் பதில்சொல்ல வைத்தால் கோபப்படாமல் அமைதியாக நிதானமாக பதில் சொல்லக் கற்றுக்கொள்ள வேண்டும். 

கோபமூட்டும் வகையில் நம் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினாலும், நாம் பொறுமையை இழக்காமல் உணர்ச்சி வசப்படாமல் வலுவான குரலில் பதில் சொல்லவேண்டும். 

 ஒவ்வொருவருக்கும் ஒரு லிமிட் உள்ளது. அதைத்தாண்டி, உங்களை விமர்சித்தால், இதுதான் கண்ணியமான எல்லை என்றும், அதைத்தாண்டி விமர்சிக்க வேண்டாம் என்றும் சொல்லி விடவேண்டும். 

உங்களைப் போன்றே சிலரையும் காயப் படுத்தினால், அவர்களுடன் நண்பனாகி, உங்களது பிரச்னைகளை மேலிடம் வரை கொண்டு செல்லலாம். 

 நீங்கள் செய்த பணிகளை ஆவணப் படுத்திக் கொள்ளுதல், உங்களது பணியை இறுதிகட்டத்தில் காப்பாற்ற உதவும். 

 கரடுமுரடான அலுவலகத்தில் நேர்மையாகப் பணியாற்றியும் நம்மைக் கவிழ்க்கப் பலர் பணி செய்யும்போது, நம்மை உறுதியாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி போன்றவற்றிலும் ஈடுபட வேண்டும்

வேண்டுமென்றெ சிலர் தன்னைச் சீண்டிக்கொண்டே இருந்தால், அவர்களிடம் உங்களது எந்தவொரு ரகசியங்களும் தெரியாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அவர்களை முடிந்தளவு கண்டு கொள்ளாமல் போய்விட வேண்டும். 

உளுந்தம் பருப்பில் உள்ள சத்துக்கள் பற்றி பார்ப்போம்