ரிலேஷன்ஷிப் பிரேக்- அப்பில் மிக முக்கியமான பிரச்சினையாக இருப்பது மூன்றாவது நபரின் தலையீடு. 

By Kalyani Pandiyan S
May 09, 2024

Hindustan Times
Tamil

ரிலேஷன்ஷிப்பில் அவரின் எல்லை என்ன? உள்ளிட்ட விஷயங்களை தெரிந்து கொள்ள, அப்பல்லோ மருத்துவமனையின் உளவியல் நிபுணர் டாக்டர் பார்கவ் ஸ்ரீ வேலுவை தொடர்பு கொண்டு பேசினேன்.

ரிலேஷன்ஷிப்ல மூன்றாவதா ஒரு நபர் நுழையுறாரு அப்படின்னா, அவர் யார் அப்படிங்கிற கேள்வி, இங்க ரொம்ப முக்கியம். அந்த மூன்றாவது நபர், யாரோ ஒரு ஃப்ரண்டாகவோ, வேறொரு உறவினராகவோ, உங்க ரிலேஷன்ஷிப்ல நடக்கக்கூடிய பிரச்சினைகள முழுமையா தெரியாதவராகவோ இருக்கக்கூடாது.

மூன்றாவது நபருக்கு உங்க இரண்டு பேர பத்தியும், உங்களுக்கு இடையே நடக்கக்கூடிய பிரச்சினைகள பத்தியும், நல்லா தெரிஞ்சிருக்கணும். உங்க ரிலேஷன்ஷிப்ல அவர் பயணிக்க, பிரச்சினைகள கேட்க, உங்க இரண்டு பேரோட சம்மதம் கண்டிப்பா இருக்கணும்.

உங்க ரிலேஷன்ஷிப்புக்குள்ள வரக்கூடிய அந்த மூன்றாவது நபர், யாரோ ஒரு தரப்புக்கு மட்டும், ஆதரவானவரா இருக்கக்கூடாது. அவர் நடுநிலையா இருந்து பிரச்சினைகள அணுகனும். அப்புறம், உங்க பிரச்சினைகள், குறித்த முழுமையான புரிதல் அவர்கிட்ட இருக்கணும்.

அந்த மூன்றாவது நபர் ஒரு மனநல மருத்துவராவோ அல்லது மேரேஜ் கவுன்சிலாராவோ என யாரா வேணாலும் இருக்கலாம். ஆனா ஒரே கண்டிஷன், அவர் நடுநிலையா பிரச்சினைய அணுகனும்.

ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம், அந்த மூன்றாவது நபர் உங்க ரிலேஷன்ஷிப்ல வரும் பிரச்சினைக்கு, முடிவு கொடுக்கக்கூடியவரா இருக்கவே கூடாது. அதில் அவர் தன்னுடைய கருத்தை முன்வைத்து விட்டு, நீங்கள் யோசித்து நல்ல முடிவுக்கு வாருங்கள் என்று சொல்லி செல்ல வேண்டும். 

இதுதான் ரிலேஷன்ஷிப்ல அந்த மூன்றாவது நபரோட ரோல்.. அந்த மூன்றாவது நபர் யாரா இருக்கலாம் அப்படிங்கிறத, நிச்சயமா இரண்டு பேரும் உட்கார்ந்து பேசிதான் முடிவெடுக்கணும். 

அது சொந்தக்காரராவோ அல்லது பொதுவான நண்பராவோ கூட இருக்கலாம். ரிலேஷன்ஷிப்ல இரண்டு பேரின் அனுமதி இருந்தா மட்டும்தான், அந்த மூன்றாவது நபர் லாஜிக் வொர்க் அவுட் ஆகும்.” என்று பேசினார். 

எலும்புகளை பலமாக்கும் உணவுகள்