விருச்சிகம் ராசிக்கு விலகும் அர்தாஷ்டம சனி! உத்வேகம் பிறக்குது! வளர்ச்சி வருகுது! பிடிக்க ரெடியா?
By Kathiravan V Nov 06, 2024
Hindustan Times Tamil
விருச்சிகம் ராசிக்கு விலகும் அர்தாஷ்டம சனி! உத்வேகம் பிறக்குது! வளர்ச்சி வருகுது! பிடிக்க ரெடியா?
அர்தாஷ்டம சனியாக உள்ள சனி பகவான், பஞ்சம ஸ்தானம் எனப்படும் மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். ஏற்கெனவே கடன் பாதிப்பு, உறவுகள் உடன் பிரச்னை, உடல் பாதிப்பு, முயற்சிகள் தோல்வி, திருமணத்தில் சிக்கல், அவமானங்கள் ஆகிய பிரச்னைகள் இருந்து இருக்கலாம். ஆனால் இவை எல்லாம் தீரும் காலகட்டம் சனி பெயர்ச்சி மூலம் வருகின்றது. வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
4ஆம் இடத்தில் உள்ள சனி பகவான் 5ஆம் இடத்திற்கு செல்வதால் எதிர்ப்புகள் அதிகம் ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை. யார் வளர்ச்சி அடைகிறார்களோ அங்கேதான் எதிர்ப்புகள் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் சாதனை படைப்பீர்கள். வாழ்கையில் மிகப்பெரிய நல்ல திருப்பங்கள் உண்டாகும்.
ராகு உடன் சனி சேர்க்கை உண்டாகும் காலத்தில் தவறான நண்பர்களின் பழக்கம் உண்டாகலாம். எனவே புதிய அறிமுகம் நட்புகளில் மிக கவனமாக இருக்க வேண்டும். சிலர் போதைக்கு அடிமையாகளாம் என்பதால் மிக கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
7ஆம் இடத்தில் உள்ள குரு பகவான் மூலம் தள்ளி போன திருமணம் நடைபெறும். திருமண தடைகள் விலகும். 11ஆம் வீட்டில் கேது பகவான் உள்ளதால் பணியிடங்களில் சிக்கல்கள் உண்டாகலாம்.
சனி பகவானின் 3ஆம் பார்வையானது 7ஆம் வீட்டில் விழுகிறது. இதனால் திருமணம் கைக்கூடினாலும் சில தடைகள் வந்து போகலாம். 7ஆம் பார்வை ஆனது லாப ஸ்தானம் ஆன 11ஆம் வீட்டில் விழுவதால் தொழில் மற்றும் பணியிடங்களில் பிரச்னைகள் வரும். 2ஆம் இடமான தன ஸ்தானத்தை சனி பகவான் 10ஆம் பார்வையாக பார்ப்பதால் பணம் எவ்வளவு வந்தாலும் செலவுகள் உண்டாகும்.