தை பொங்கல் திருநாளில் சர்க்கரை பொங்கல் தவிர வேறு என்னெ்ன உணவுகளை சமைத்து ருசிக்கலாம் என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jan 15, 2024

Hindustan Times
Tamil

இந்தியா முழுவதும் பல்வேறு பெயர்களால் கொண்டாடப்படும் விழாவாக தை பொங்கல் இருந்து வருகிறது. பரவலாக மகர சங்கராந்தி என அழைக்கப்படும் இந்த விழாவில் பாரம்பரியமான உணவுகளை சமைத்து ருசிக்கலாம்

தென் இந்தியாவில் பரவலாக சாப்பிடக்கூடிய உணவாக இருக்கிறது வெண் பொங்கல். இதில் அரசி, பருப்பு, நெய் போன்றவை சேர்க்கப்படுகிறது. பொங்கல் நாளில் சமைக்கப்படும் முக்கிய உணவாக இருந்து வருகிறது

எள்ளு லட்டு, இனிப்பு வகை உணவாக பொங்கல் நாளில் தயார் செய்யலாம். ஊட்டச்சத்துகளின் களஞ்சியமாக இருந்து வரும் இதில் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதுடன், செழிப்பை குறிக்கும் விதமாக இது அமைகிறது

இந்தியர்கள் அதிகம் சாப்பிடும் உணவாக இருந்து வரும் கிச்சடி இல்லாமல் மகர சங்கராந்தி நாள் நிறைவு பெறாது. அரிசி, பருப்பு சேர்ந்த தயார் செய்யப்படும் கிச்சடி செரிமானத்துக்கு எளிதாக இருக்கும்

எள்ளு விதை, வெல்லம் ஆகியவற்றை வைத்து தயார் செய்யப்படும் கஜக். மிகவும் சுவை மிக்கதாக இருந்து வரும் கஜக்கில் உடலுக்கு தேவைப்படும் அடிப்படை தாதுக்கள், ஊட்டச்சத்துகள் கிடைக்கும்

வேர்கடலை, உலர்ந்த தேங்காய், வெல்லம், எள்ளு  விதை ஆகியவற்றால் தயார் செய்யப்படும் உணவாக எள்ளு பெல்லா உள்ளது. சுவை மிக்கதாக இது இருப்பதோடு மட்டுமில்லாமல் ஊட்டச்சத்துகளின் களஞ்சியமாகவும் உள்ளது

பஞ்சாபி உணவாக இருந்து வரும் பின்னி கோதுமை மாவு, நாட்டு நெய், வெல்லம் ஆகியவற்றை வைத்து தயார் செய்யும் உணவாக உள்ளது. பண்டிகையை சுவையுடன் கொண்டாட உகந்த உணவாக உள்ளது

அரிசி புட்டிங்காக இருந்து வரும் பாயாசம் வெல்லம் சேர்த்து தயார் செய்யும் இனிப்பு பலகாரமாக இருந்து வருகிறது. 

குஜராத் மாநில உணவாக இருந்து வரும் உந்தியு பல காய்கறிகள், மசாலா பொருள்களின் கலவையாக உள்ளது

மற்றொரு இனிப்பு பலகாரமாக இருந்து வரும் போளி பருப்பு, வெல்லம், கோதுமை ஆகியவை கலந்து தயார் செய்ய வேண்டும்

ஒடிசா மாநில உணவாக செளலா சமையல் செய்யப்பட்ட புதிதாக தயாரான அரசி, வெல்லம், வாழைப்பழம், தேங்காய் ஆகியவை கொண்டு தயார் செய்யப்படுகிறது

நீரேற்றத்தை அதிகரிக்கும்