கொடைக்கானலை விடுங்க.. தேனி மாவட்டத்தில் சுத்திப்பார்க்க இம்புட்டு இடம் இருக்கா?

By Marimuthu M
Dec 16, 2024

Hindustan Times
Tamil

வைகை அணை: தேனியில் இருந்து 17 கி.மீ தொலைவில் இருக்கும் இங்கு சிறுவர் பூங்காவும் உண்டு. 

சுருளி அருவி: தேனியில் இருந்து 49 கி.மீ தொலைவில் இருக்கும் பாதுகாப்பான அருவி ஆகும். 

மேகமலை: தேனியில் இருந்து சின்னமனூர் வழியாக 51 கி.மீ பயணித்தால் குலுகுலு மேகமலையை அடையலாம். தங்குமிடம் வசதியுண்டு.

கொழுக்குமலை: தேனியில் இருந்து சூரியநெல்லிவழியாக 65 கி.மீ பயணித்து கொழுக்குமலையை அடையலாம். கேம்பிங், சூரிய உதயத்திற்கு உற்ற இடம்.

கும்பக்கரை: தேனியில் இருந்து பெரியகுளம் வழியாக 24.2 கி.மீ பயணித்தால் ஜிலு ஜிலு கும்பக்கரை அருவியை அடையலாம்.

மேகமலை சின்னசுருளி: தேனியில் இருந்து கடமலைக்குண்டு வழியாக 46 கி.மீ பயணித்தால் சின்னசுருளியை அடைந்து மூலிகை குளியல் போடலாம். 

குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் ஆலயம்: தேனியில் இருந்து 21 கி.மீ. பயணித்தால், உலகப்புகழ்பெற்ற சுயம்பு சனீஸ்வரன் ஆலயத்தை அடையலாம்.

சென்னை வந்தடைந்தார் சாம்பியன் குகேஷ்