தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி அதிரடி கைது!

By Pandeeswari Gurusamy
Nov 16, 2024

Hindustan Times
Tamil

அந்தணர்கள் சமூகத்தின் மீது தொடரும் அவதூறுகளை கண்டித்து, இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. அவர் மீது சென்னை எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவர் மீது புகார்கள் குவிந்தன. 

இந்த விவகாரத்தில் மதுரை திருநகர் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நடிகை கஸ்தூரி மீது திருச்சியிலும் 3 பிரிவுகளின் கீழ் போலீஸாரும் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தேனி மாவட்டம் - ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில் கஸ்தூரி சென்னை போயஸ் கார்டனில் இருந்த வீட்டை பூட்டி விட்டு தலைமறைவானார்.  கஸ்தூரியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 

அவர் ஹைதராபாத் வீட்டையும் பூட்டி விட்டு தலைமறைவானதால் தனிப்படை  போலீசார் ஹைதராபாத், தெலுங்கானாவில் முகாமிட்டு தேடிவந்தனர்.

இந்நிலையில் கஸ்தூரி ஆந்திராவில் உள்ள தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியானது. 

 இந்நிலைய்ல தற்போது நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து தமிழ்நாடு போலீசார் கைதுசெய்தனர்.

All Photos :actresskasthuri (Instagram)

குளிர்காலத்தில் இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!