கோடை நேரத்தில் நிலவும் உச்சபட்ச வெப்பநிலை, அதிக நேரம் சூரிய ஒளியை தலைமுடி உள்வாங்குவது போன்ற காரணங்களால் தலை முடி உதிர்வு, அடர்த்தி குறைவு ஏற்படுகின்றன

By Muthu Vinayagam Kosalairaman
May 25, 2023

Hindustan Times
Tamil

உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே எப்போதும் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை தவறாமல் குடிக்க வேண்டும். உடலில் ஏற்படும் வறட்சி தலை முடியை உடையச்செய்து, முடி உதிர்வை ஊக்குவிக்கும்

சமச்சீரான உணவை சாப்பிட வேண்டும். வைட்டமின் சி, டி, இரும்புச்சத்து, துத்துநாகம், பையோடின், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் கோடை காலத்தில் தலை முடி உதிர்வை தடுக்கிறது. அதேபோல் இந்த சீசனுக்கு ஏற்ற பழங்களான மாம்பழம், திராட்சை, வெள்ளரி போன்றவற்றை சாப்பிடலாம்

தலைமுடியில் அழுக்கு சேராமல் இருக்க அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் தவறாமல் கழுவ வேண்டும்

தலைமுடியை கழுவுவதன் மூலம் வேர்கள் வலுப்படுவதுடன், வியர்வையால் சிக்கல் ஏற்படுவது, சீரற்று இருப்பது தடுக்கப்படுகிறது

ஹேர் ஸ்டைலிங் செய்வதை அறவே தவிர்க்க வேண்டும்.  தலைமுடியை உலர வைப்பதால் உதிர்வதோடு, அடர்த்தி குறையவும் வாய்ப்பு உள்ளது. எனவே ஸ்டைலிங் சாதனத்தை வைத்து ஸ்டெரிய்ட்னிங் அல்லது கர்லிங் செய்ய தவிர்த்தல் நலம்

தவறாமல் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மனஅழுத்தம் குறையும். இதனால் தலைமுடி உதிர்வதும் தடுக்கப்படும். அத்துடன் வேர்களில் ரத்த ஓட்டம் அதிகரித்து, தலை முடி வளர்வதை ஊக்குவிக்கும்

புகைப்பிடித்தல், மதுஅருந்துதலை தவிர்ர வேண்டும். இவை தலை முடி உதிர்வுக்கு வழி வகுப்பதுடன்,  வேர்களில் ரத்த ஓட்டத்தை குறைக்கிறது

’நீங்க 3 ஆம் தேதி பிறந்தவரா? ’ உங்க வாழ்கை இப்படிதான் இருக்கும்! நியூமராலஜி ரகசியங்கள்!