டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்களுக்கு பிளேட்லெட் எனப்பட்டும் ரத்த தட்டுக்களின் எண்ணிக்கையானது குறைந்துவிடும். இதை அதிகரிக்க என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Oct 02, 2023
Hindustan Times Tamil
பருவநிலை மாற்றம் காரணமாக நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் நோய் பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொசு காரணமாக ஏற்படும் இந்த நோய் பாதிப்பினால் ரத்த தட்டுக்களின் எண்ணிக்கைய குறைத்து பாதிப்பை தீவிரமாக்குகிறது
இயற்கையின் முறையில் ரத்த தட்டுக்களை உயர்த்துவதற்கான வழிகளை பார்க்கலாம்
திரவங்கள் அதிகமாக பருக வேண்டும்
தண்ணீர், சூப், எலுமிச்சை கலந்த நீர், இளநீர் போன்ற திரவங்களை அதிகமாக எடுத்துக்கொண்டு உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். இதனால் உடலிலுள்ள எலெக்ட்ரோலைட்களின் சமநிலை பராமரிக்கப்படுகிறது
அடிக்கடி குறைவான அளவில் உணவுகளை எடுத்துக்கொள்ளுதல்
குமட்டல் ஏற்படுவதை தவிர்க்க வழக்கமாக மூன்று முறை சாப்பிடுவதற்கு பதில் அடிக்கடி குறைந்த அளவில் உணவு எடுத்து கொள்ள வேண்டும்
சீசனில் கிடைக்கும் பழங்களை சாப்பிடுதல்
பழங்களில் அதிக அளவிலான வைட்டமின் சி, ஏ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இவற்றை உங்கள் உணவில் சேர்த்துகொள்வதால் பிளேட்லேட் எண்ணிக்கை உயர்கிறது
உங்கள் உணவில் புரோ பயோடிக்ஸ் சேர்த்து கொள்ளுதல்
புரோ பயோடிக்ஸ் உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தெரிமானத்தை மேம்படுத்தி, ரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது
மூலிகை மற்றும் மசாலாக்களை உணவில் சேர்த்துக்கொள்ளுதல்
மிளகு, ஜாதிக்காய், இலவங்கப்பட்டை, பூண்டு , இஞ்சி, மஞ்சள் போன்ற அழற்சி, வைரஸ், பாக்டீரியா பாதிப்புகளை குறைக்கும் தன்மை கொண்ட மூலிகை மற்றும் மசாலக்களை உணவில் சேர்க்க வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், பிளேட்லேட் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது